தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

22 Jul 2026, 11:48 pm
சென்னை விரைவு செய்திகள்

சாகர் கவாச் கடல் பாதுகாப்பு ஒத்திகை

செங்கல்பட்டு,ஜூலை 22- தமிழகத்தில் கடல் வழி யாகத் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்ப தற்காக ‘சாகர் கவாச்’ எனப்படும் கடல் பாதுகாப்பு ஒத்திகை ஜூலை 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதி கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கடலோரப் பாதுகாப்பு குழும மற்றும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் இணைந்து தீவிர ரோந்து மற்றும் வாகன சோத னைகளில் ஈடுபட உள்ள னர். மேலும், கடல் வழி யாக ஊடுருவ முயல்பவர் களைத் தடுத்துப் பிடிக்கும் பணிகளிலும் போலீசார் ஈடுபடவுள்ளனர்.அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் கல்விக் கடன் விழிப்புணர்வு முகாம்

சிதம்பரம், ஜூலை 22- அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் புலத்தில், பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை சார்பில் மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் சி.ஜி. சரவணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியல் துறைத் தலைவர் பி. சண்முகராஜா இம்முகாமை ஏற்பாடு செய்திருந்தார். இம்முகாமில், வங்கியின் துணை மேலாளர் சினேகா மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரதிநிதி நிவேதா உள்ளிட்ட வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்விக் கடன் தொடர்பான பல்வேறு முக்கியத் தகவல்களை வழங்கினர். முகாமில், உயர்கல்விக்கான கல்விக் கடன் பெறும் நடைமுறைகள், விண்ணப்பிக்கும் முறை, அவசியமான தகுதிகள், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், வட்டிச் சலுகைகள், அரசின் வட்டி மானியத் திட்டங்கள், கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் கால அவகாசம், கல்விக் கடனுடன் தொடர்புடைய காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கான வங்கியின் பல்வேறு சேவைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் பொறியியல் புலத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு, கல்விக் கடன் திட்டங்கள் தொடர்பான பயனுள்ள தகவல்களைத் தெரிந்து பயன்பெற்றனர்.

மண் சுவர் இடிந்து மாணவர் பலி

கடலூர், ஜூலை 22- கடலூர் அருகே உள்ள கராமணிக்குப்பம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் குருபிரசாத் (17). இவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வரக்கால்பட்டியில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் இவர் தூங்கிக் கொண்டிருந்தார். புதன்கிழமை அதிகாலை திடீரென கூரை வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய அவருக்குத் தலையிலும் இடது கையிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து, அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து நெல்லிக்குப்பம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கடலூர், ஜூலை 22- வேப்பூர் அருகே பெரியநெசலூர் பொன்னுசாமி (65), ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார். வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.