தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

28 Oct 2026, 1:14 am
சென்னை விரைவு செய்திகள்

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு போனஸ்

புதுச்சேரி, அக்.27-புதுச்சேரியில் வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளித் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அரசுஊழியர்களுக்கு தீபாவளிப் போனஸ் அறிவிக்கப் பட்டுள்ளது.மத்திய அரசின் நடை முறையை பின்பற்றி அறிவிக்கப்பட்டுள்ள இந்ததிட்டத்தின்படி, தகுதி யுடைய ‘சி’ பிரிவு மற்றும் வர்த்தகமற்ற ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு 30 நாட்களுக்கான ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்கப்படும். கடந்த 2026 மார்ச் 31-ஆம் தேதி பணியில் இருந்ததுடன், 2025–26-ஆம்நிதியாண்டில் குறைந்த பட்சம் 6 மாதங்கள் தொடர்ச்சியாகச் சேவை செய்த ஊழியர்கள் இதைப் பெறத்தகுதியுடையவர்கள் ஆவர்.போனஸ் கணக்கீட்டிற் கான மாத ஊதிய உச்ச வரம்பு ரூ.7,000 என நிர்ண யிக்கப்பட்டுள்ளதால், அதிகபட்சமாகரூ.6,908 வரை போனஸ் தொகை யாக கிடைக்கும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,240 நாட்கள் பணிபுரிந்ததற்காலிக பணியாளர்க ளுக்கு ரூ.1,184 கிடைக்கும்.

பழவேற்காட்டில் மீனவர்களுக்கு மீன்வளத்துறை எச்சரிக்கை

திருவள்ளூர், அக்.27-ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட உள்ளதை அடுத்து, திருவள்ளூர்மாவட்டம் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதள மையத்திலிருந்து வரும் 30.10.2026 வெள்ளிக்கிழமை இரவு 11:51 மணிக்கு ராக்கெட் ஏவப்பட உள்ளது. இதையொட்டி ஏற்படும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 30ஆம் தேதி மாலை 4 மணிமுதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை கட லுக்குச் செல்லக் கூடாது என்றும், இத்தகவலைப் படகுஉரிமையாளர்களுக்கு மீன்பிடி கிராம தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவிக்க வேண்டும் என்றும்மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

சென்னை விரைவு செய்திகள்ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

கடலூர்,அக்.27-அனுமதியின்றி வீடுகளில் நாட்டுப்பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக முத்தாண்டிக்குப்பத்தைச் சேர்ந்தஇரண்டு பெண்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே முத்தாண்டிக் குப்பத்தைச் சேர்ந்த தனம் (46), ஆனந்தி (46) ஆகியோர்தங்களது வீடுகளில் அனுமதியின்றி நாட்டு பட்டாசுகளைத் தயாரித்து விற்பனை செய்து வந்ததாகக்கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின்பேரில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5. லட்சம்மதிப்பிலான நாட்டு பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தனம், ஆனந்தி ஆகிய இருவர் மீதும்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அகில இந்திய நிழற்படப் போட்டி: படங்கள் அனுப்ப அழைப்பு

சென்னை, அக்.27-கடற்படை தெற்கு ஆணையகம் சார்பில் கொச்சி யில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெறவுள்ள 14-வதுமுப்படைகள் புகைப்படக் கண்காட்சியையொட்டி, அகில இந்திய அளவிலான நிழற்படப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் தொடர்பான நிகழ்வுகளைப் படம்பிடித்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம். 2025 நவம்பர் 20 முதல் 2026 அக்டோபர் 31 வரை எடுக்கப்பட்ட,ஆங்கிலம் அல்லது இந்தி தலைப்புடன் கூடிய அதிகபட்சம் 3 புகைப்படங்களை (12x18 அங்குலம், 300 DPI) அனுப்ப வேண்டும். தகுதியான புகைப்படங்களை நவம்பர் 10க்குள் sncmilphoto@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். வெற்றிபெறுவோருக்குப் பரிசுத்தொகையும் சான்றிதழ்களும் வழங்கப் படும்; வெற்றியாளர்கள் விவரம் நவம்பர் 22 அன்றுஅறிவிக்கப்படும்.

பேருந்து மோதி 10 கார்கள் சேதம்

சென்னை, அக். 27-செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக்கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி வந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, சென்னை உயர்நீதிமன்றம் அருகே திடீரென பிரேக் பழுதடைந்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதுடன், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது.

காவல் ஆய்வாளருக்கு ஜாமின்

சென்னை,அக். 27-பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக அச்சுறுத்தி, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளர் முகமது புஹாரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த சீனிவாசன் ஆகி யோர் யானைக்கவுனி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும், தினசரி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முகமது புஹாரிக்கு நீதிபதி ஜாமீன்

வழங்கி உத்தரவிட்டார்.

திருவண்ணாமலை தீபத் திருவிழா வசதிகள்: உயர்மட்டக் குழு அமைப்பு

சென்னை, அக். 27- திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான அம்மணி அம்மான் மடத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி டி.எஸ்.சங்கரை அப்புறப்படுத்திய உத்தரவையும், அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம் தகுதிநீக்கம் செய்யப்பட்ட உத்தரவையும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது. மேலும், மடத்தின் காலி நிலத்தில் 2027மார்ச் இறுதிக்குள் பக்தர்கள் வளாகம் அமைக்கவும், அதுவரை தற்காலிக வசதிகளைச் செய்து தரவும் கோயில் செயல் அலுவலருக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தி நவம்பர் 10-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பணிகளைக் கண்காணிக்கப் பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் தலைமையில், அறநிலையத்துறை ஓய்வுபெற்ற இணை ஆணையர் எஸ்.ஜெயராமன் உள்ளிட்டோர் அடங்கியஉயர்மட்டக் குழுவை நியமித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரேக் பழுதடைந்த பேருந்து மோதி கார்கள் சேதம்

சென்னை, அக். 27-செங்கல்பட்டு மாவட்டம் ஈஞ்சம்பாக் கத்தில் இருந்து சென்னை தீவுத்திடல் நோக்கி வந்த மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்து, சென்னை உயர்நீதிமன்றம் எதிரே என்.எஸ்.சி. போஸ் சாலையில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பிரேக் பழுதடைந்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதுடன், சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது.

இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போர் நினைவுச் சின்னம் அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து வடக்கு கடற்கரை போலீஸார் பேருந்து ஓட்டுநர் ராமமூர்த்தி மற்றும் நடத்துநர் தேவராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக மின்கட்டணம்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, அக். 27-சென்னை திருவேற்காட்டைச் சேர்ந்தகாமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலமனுவில், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பின் 100 யூனிட் இலவச மின்சாரம் 200யூனிட்டாக உயர்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார். ஆனால், கடந்த ஒன்றரை மாதங்களாக மின்கட்டணம் முந்தைய பில்லைப் போல இரண்டு, மூன்று மடங்காகஅதாவது ரூ.2,000-லிருந்து ரூ.4,000 முதல் ரூ.5,000 வரை வருவதாக ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் புகார்அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மின் கட்டண விதிப்பிலுள்ள குறைபாடுகளை விசாரிக்கக் குழு அமைக்கவும், பழைய

கட்டண நடைமுறையைப் பின்பற்ற உத்தரவிடவும் கோரியுள்ள இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இது பொதுநல வழக்காக உள்ளதால் தலைமை நீதிபதிஅமர்வுக்குப் பட்டியலிடப் பரிந்துரைத்துள்ளார்.

பருவமழை புகார்களைத் தெரிவிக்க திருவள்ளூரில் கட்டுப்பாட்டு அறைகள்

திருவள்ளூர், அக்.27-வடகிழக்கு பருவமழை 2026-ன் காரணமாக மழை மற்றும் வெள்ளம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க மாவட்டஅவசர கால கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொள்ளலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ச.கவிதா அறிவித்துள்ளார்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 044-27664177, 27666746, 27660035,27660036 ஆகிய எண்களும், 9444317862, 9498901077 என்ற வாட்ஸ்அப் எண்களும் 24 மணி நேரமும்இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவள்ளூர் கோட்டாட்சியர் எஸ்.எஸ்.பிரசாந்த் (9445000412), பொன்னேரி கோட்டாட்சியர் எஸ்.முருகவேல் (பொ) (9445000410), திருத்தணி கோட்டாட்சியர் ராஜகோபால் (9445000411) மற்றும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள், ஊரக வளர்ச்சி, நகராட்சி, பேரூராட்சி துறைஅலுவலர்களையும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ச.கவிதாகேட்டுக்கொண்டுள்ளார்.

காலமானார்

சென்னை, அக்.27-மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் எழும்பூர் பகுதி முன்னாள் பகுதிச்செயலாளரும் மூத்த தோழருமானராஜாமணி தாயார் ஜி. வள்ளியம்மாள் (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரண மாகசெவ்வாய்க்கிழமை மாலை (அக். 27) கால மானார்.அவரது உடல், சென்னை பெரியமேடு, நேவல் மருத்துவமனை 7-ஆவது தெருவில் அமைந்துள்ள இல்லத்தில்அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. செய்தி அறிந்தவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , சிஐடியு தொழிற்சங்கநிர்வாகிகள் அப்பகுதி பொதுமக்கள் மறைந்த வள்ளியம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், ராஜாமணிமற்றும் அவரது குடும்பத்தினருக்குத் இரங்கலைத் தெரிவித்தனர்.புதன்கிழமை (அக். 28) மாலை அவரதுஉடல் ஓட்டேரி மயா னத்தில் நல்லடக்கம் செய்யப் படவுள்ளது என குடும்பத்தி னர் தெரிவித்துள்ளனர்.

ராணிப்பேட்டை காவல்துறை அறிவிப்பு

ராணிப்பேட்டை,அக்.27-ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலை விபத்துகள் மற்றும்உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு, இரு சக்கர வாகன ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணியவேண்டும் என மாவட்டகாவல்்துறை எச்சரித்து ள்ளது. மீறினால் ரூ.1,000அபராதமும், ஓட்டுநர் உரி மம் 3 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.