தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

4 Oct 2026, 1:11 am
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

மதுராந்தகம்: பறக்கும் படை சோதனையில் ரூ.47.10 லட்சம் பறிமுதல்!

மதுராந்தகம், அக்.3- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வரும் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்கத் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ராமாபுரம் பகுதியில் சனிக்கிழமை (அக்.3) நடைபெற்ற வாகனச் சோதனையில் இரு கார்களில் இருந்து ரூ.32.10 லட்சமும், அச்சிறுப்பாக்கம் பஜார் வீதியில் வந்த காரில் இருந்து ரூ.2 லட்சமும் உரிய ஆவணங்களின்றிப் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சோத்துப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நடத்திய சோதனையில் ரூ.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டுமொத்தமாகப் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.47 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணம், தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

பல்லாவரம் ஏரி புனரமைப்பு

சென்னை, அக்.3-ஆகாய தாமரை மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்லாவரம் பெரியஏரியைமீட்டமைக்க நீர் வளத்துறைசார்பில் ரூ.7 கோடி மதிப்பில் புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் சாவு எதிரொலி: மீனவர்கள் போராட்ட எச்சரிக்கை

சென்னை, அக். 3-எண்ணூரில் கழிவு நீர் குழாய்களை அடைப்போம், என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எண்ணூரில் உள்ள கொசஸ்தலை ஆற்றில், கடந்த ஆகஸ்ட் மாதம், டன் கணக்கில் மீன்கள் செத்து மிதந்தன. இதற்கு கழிவு நீர் கலப்பது தான் காரணம் என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும், தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறையும் தெரிவித்துள்ளன.

ஆனால் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் மேம்பாட்டு வாரியத் தலைவர் ஆனந்த், கழிவுநீரால் தான் மாசு ஏற்படுகிறது, என்பதற்கு போதுமான ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார். மற்றும் "வட சென்னை வளர்ச்சி" திட்டத்தின் கீழ், ஆற்றில் கலக்கும் பெரும்பாலான குழாய்கள் மூடப்பட்டு விட்டன என்றும், மீதம் உள்ள பிரச்சினைகளும், திட்டங்கள் நிறைவேறும் போது தீர்ந்து போகும் என்று தெரிவித்தார்.

இப்படி அரசாங்க நிறுவனங்களின் இடையே, இரு வேறு கருத்துகள் நிலவுவதால், நடவடிக்கைகள் எடுப்பதில் கால தாமதமாகிறது. இது மீனவர்களை கோபமுறச் செய்திருக்கிறது.

இந்த பிரச்சினை காரணமாக, 20 நாட்களுக்கு மேல் இவர்களால் மீன் பிடிக்க முடியவில்லை என்றும், பிடித்த மீன்களையும் மக்கள் வாங்க முன்வருவதில்லை என்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், நாள் ஒன்றிற்கு, அவர்களுக்கு ரூ. 2000த்தில் இருந்து ரூ 20,000 வரை நஷ்டம் ஏற்படுவதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

எனவே காட்டுக்குப்பம், முகத்துவார குப்பம், தாழங்குப்பம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய பகுதிகளில் உள்ள சுமார் 10 கழிவுநீர்க் குழாய்களை, தாங்களே மூடுவோம் என மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அறிவியல் கண்டுபிடிப்புகளைஊக்குவித்த ஆசிரியர்களுக்கு விருது!

சென்னை, அக். 3-மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையில், விவோ இந்தியா நிறுவனம் ‘விவோ இக்னைட் 4.0’ திட்டத்தின் கீழ் 10 ஆசிரியர்களுக்கு ‘ஆசிரியர் புத்தாக்க பெலோஷிப்’ விருதுகளை அறிவித்துள்ளது.

வழக்கமான வகுப்பறை கற்றலைத் தாண்டி செய்முறைக் கற்றல், புதுமையான கற்பித்தல் முறைகள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறை நடைமுறைகளைச் செயல்படுத்தும் ஆசிரியர்களை அங்கீ கரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.இந்த பெலோஷிப்பிற்காக இந்தியா முழுவதிலும் பெறப்பட்ட 200-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, கடுமையான மதிப்பீட்டிற்குப் பிறகு 6 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கற்பித்தலில் புதுமை, நிஜ உலக தாக்கம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய நான்கு முக்கிய அம்சங்களின் அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாணவி புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மிரட்டல் உடற்பயிற்சியாளர் கைது

சென்னை,அக்.3-சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர், கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு, அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றபோது, அங்கு பயிற்சியாளராக இருந்த ஓட்டேரி தாசமகான் 3ஆவது தெருவைச் சேர்ந்த இம்தியாஸ் ஷெரிப் (27) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.நாளடைவில் இருவருக்கும் இடையேயிலான பழக்கம் காதலாக மாறியது. அண்மையில் ஷெரிப் நடவடிக்கை பிடிக்காததால், அந்த பெண் அவரை விட்டு பிரிந்தார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி அந்த பெண் கல்லூரிக்கு செல்லும்போது, ஷெரிப் வழிமறித்து தாக்கியுள்ளார். அதோடு ஆபாசமாக சித்தரித்து வைத்திருந்த அந்த பெண் புகைப்படத்தை வாட்ஸ்அப்பில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண், தலைமைச் செயலக குடி யிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஷெரீப்பை கைது செய்தனர்.

3 வயது குழந்தைக்கு வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

சென்னை, அக்.3-அரிய வகை கல்லீரல் நோயால்பாதிக்கப்பட்ட மூன்றரை வயது குழந்தைக்கு, சென்னையில் வெற்றிகர மாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைசெய்யப்பட்டது.

மஞ்சள் காமாலையுடன் கிண்டி ரெயின்போ குழந்தைகள் மருத்துவ மனைக்கு அழைத்து வரப்பட்ட குழந்தையைப் பரிசோதித்ததில், எல்.சி. எச் என்ற அரிய நோய் இருப்பதும், அதன் காரணமாக கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது. குழந்தையின் ரத்தத்தில் பிலிரூபின் அளவும் மிகமிக அதிகமாக இருந்தது.முதலில் குறைந்த அளவிலான கீமோ தெரபி மூலம் எல்.சி.எச் நோய் 90 முதல் 95 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டது.சிகிச்சையின் போது குழந்தைக்கு தொடர்ந்து சிறு நீர்ப் பாதை நோய்த்தொற்று ஏற்பட்டதால் மேற்கொண்ட பரிசோதனையில், பிறவியி லேயே சிறுநீர் பின்னோக்கிச் செல்லும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து சிறுநீர்ப் பாதை சரிசெய்யப்பட்டது.

பின்னர் குழந்தையின் தந்தையின் கல்லீரலின் இடது பக்கத்தில் இருந்து ஒரு பகுதி தானமாகப் பெறப்பட்டு, சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் குழந்தைக்கு பொருத்தப் பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த

மருத்துவர்கள் ஒருங்கிணைந்து மேற்கொண்ட சிகிச்சையின் மூலம் குழந்தை குணமடைந்துள்ளதாக மருத்துவ மனையின் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி, கல்லீரல் மாற்று சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் சோமசேகரா எச்.ஆர். ஆகியோர் தெரிவித்தனர்.

பார்சலில் வந்த தங்க நாணயங்களைத் திருடியவர் கைது!

சென்னை, அக்.3-சென்னை தி.நகரில் உள்ள கொரியர் அலுவலகத்தில், பார்சல்களில் வந்த தங்க நாண யங்களைத் திருடியதாக பெண் ஊழியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.தி.நகர் டாக்டர் சதாசிவம் சாலையில் உள்ள பிரபல கொரியர் அலுவலகத்தில் மேலாளராகப் பணிபுரிபவர்கு.ரவிச்சந்திரன். இவர் சில நாட்களுக்கு முன்பு பாண்டி பஜார் காவல் நிலை யத்தில் புகார் ஒன்றை அளித்தார்.அந்தப் புகாரில், "எங்களது நிறுவனத்திற்குப் பார்சல்களில் வரும் தங்க நாணயங்கள் சில நாட்களாகத்தொடர்ந்துதிருடப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.3.40 லட்சம் மதிப்புள்ள தங்க நாண யங்கள் திருடப்பட்டுள்ளன. இதில்ஈடுபட்டவரைக் கண்டறிந்து கைது செய்து, தங்க நாணயங்களை மீட்டுத்தர வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.இப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இத் திருட்டில்ஈடுபட்டது அதே கொரியர் அலுவலகத்தில் ஊழியராகப் பணிபுரியும் கொருக்குப் பேட்டை, ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ஜெ. குமுத வள்ளி (55) என்பதுதெரியவந்தது. இதையடுத்து, குமுதவள்ளியைக் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

காந்தி ஜெயந்தி விடுமுறை வழங்காத 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கிருஷ்ணகிரி, அக்.3 -காந்தி ஜெயந்தியான அக்.2 அன்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களின் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) ராஜசேகர் தலைமையில் 38 கடைகள், 44 உணவு நிறுவனங்கள் மற்றும் 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 88 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

விடுமுறை விடாத 26 கடைகள், 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது என்று ஆணையர் (அமலாக்கம்) சங்கர் தெரிவித்துள்ளார்.

காலமுறை ஊதியம் வழங்க கோரி அக்.14 சென்னையில் பெருந்திரள் முறையீடுசத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

சென்னை, அக்.3-காலமுறை ஊதியம் வழங்க கோரி அக்.14 அன்று சென்னையில் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னையில் சங்கத்தின் தலைவர் பி.செல்லதுரை, பொதுச்செயலாளர் ஏ.ஜெசி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்துடன் காலை உணவு திட்டத்தை இணைத்து செயல்படுத்த வேண்டும், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை விரைந்து நிரப்ப வேண்டும்,

மாணவர்களுக்கான உணவுப்படியை உயர்த்த வேண்டும், கல்வி மற்றும் பணி மூப்பு அடிப்படையில் பிறத்துறைகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.14ந் தேதி முதலமைச்சரிடம் மனு அளிக்கும் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெறும். அதனை தொடர்ந்து, டிச.9ந் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் நடைபெறும்” என்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.