சென்னை விரைவு செய்திகள்
18 Jul 2026, 12:05 am

கல்வராயன்மலையில் மீண்டும் கோடை விழா

கள்ளக்குறிச்சி, ஜூலை 17- கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் கொரோனா காலத்திற்குப் பிறகு மீண்டும் கோடை விழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா அறிவித்துள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் சமூக நீதித்துறை அமைச்சரும், மாவட்டப் பொறுப்பு அமைச்சருமான வன்னி அரசு அவர்கள், கல்வராயன்மலையில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகள் மற்றும் மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், அப்பகுதி மலைவாழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மீண்டும் கோடை விழாவை நடத்த அறிவுறுத்தினார். அதன்படி, கல்வராயன்மலையில் உள்ள கரியாலூரில் வரும் ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 1 ஆகிய இரண்டு நாட்கள் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த விழா குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா வெளியிட்டுள்ள செய்தியில்: “விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சிகள் அமைக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்வராயன்மலையில் கோடை விழா நடைபெறவுள்ளதால்

திருவள்ளூரில் ரூ 1.91 கோடி நூதன கொள்ளை: அடகு கடை உரிமையாளர் புகார்

திருவள்ளூர், ஜூலை 17- திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் பூவரசனிடம், காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் தங்க நகை களை மலிவு விலையில் விற்பதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி 1.91 கோடி ரூபாய் பணத்தை உரிமையாளர் காண்பித்தபோது, நகையைச் சரிபார்க்கச் சென்ற நேரத்தில் பணப்பையை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ள னர். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்ட உரிமையாளர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று சென்னை மற்றும் புறநகரில் மின் தடை

சென்னை, ஜூலை 17- சென்னை மின்சார வாரிய பராமரிப்புப் பணிகளுக்காக, சனிக்கிழமையன்று (ஜூலை 18) காலை முதல் மதியம் 2 மணி வரை தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், பஞ்செட்டி, சோழிங்கநல்லூர், பொன்னேரி, திருமுல்லைவாயல், கோவிலம்பாக்கம், ஒட்டியம்பாக்கம், போரூர், ஆவடி, அடையார், பூந்தமல்லி, தாம்பரம், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பல்லாவரம் மற்றும் குமணஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும், டி நகர் பகுதியில் உள்ள எம்.ஆர்.சி நகர் துணை மின் நிலையத்தில் நடைபெறும் சிறப்புப் பணிகளுக்காக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எம்.ஆர்.சி நகர், ஆர்.ஏ. புரம், காந்தி நகர், சாந்தோம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேர மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் ரூ 1.91 கோடி நூதன கொள்ளை: அடகு கடை உரிமையாளர் புகார்

திருவள்ளூர்,ஜூலை 17- திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த அடகு கடை உரிமையாளர் பூவரசனிடம், காரில் வந்த மர்ம நபர்கள் இருவர் தங்க நகை களை மலிவு விலையில் விற்பதாகக் கூறி ஆசை வார்த்தை பேசியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பி 1.91 கோடி ரூபாய் பணத்தை உரிமையாளர் காண்பித்தபோது, நகையைச் சரிபார்க்கச் சென்ற நேரத்தில் பணப்பையை எடுத்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ள னர். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து, பாதிக்கப்பட்ட உரிமையாளர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் வங்கி அதிகாரியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை

சென்னை, ஜூலை 17- மயிலாடுதுறையைச் சேர்ந்த தனியார் வங்கி அதி காரி ஒருவரை, காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரிடம் ரூ.8 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த திருச்சிராப்பள்ளி சிறப்பு காவல் படை காவலர் கார்த்திகேயனை (27) சென்னை வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில், பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருந்த அவர் வெள்ளிக்கிழமை சிறை யிலடைக்கப்பட்டார்.