தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

10 Jul 2026, 9:52 pm
சென்னை விரைவு செய்திகள்

ஆட்சியர் ஜூலை 15-ல் கள ஆய்வு

கடலூர், ஜூலை 10- கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஜூலை 15-ஆம் தேதி விருத்தா சலம் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின்போது, அரசு அலு வலகங்களின் செயல்பாடு, நலத்திட்டங்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து ஆட்சியர் நேரில் ஆய்வு செய்கிறார். இதன் ஒரு பகுதியாக, பொது மக்களின் குறைகளைக் கேட்டு மனுக்களைப் பெறுவதற்காக, விருத்தாசலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறு கிறது.

நெறிக்குறவர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த ஆட்சியர்

விழுப்புரம், ஜூலை 10- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி, ஜெ.ஜெ.நகர் பகுதியில் வசிக்கும் நெறிக்குறவர் சமூக மக்களை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாயன்று (ஜூலை 10) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த திடீர் ஆய்வின்போது, அந்தப் பகுதியில் வசிக்கும் நெறிக்குறவர் சமூக மக்களின் குடியிருப்புகளை நேரில் பார்வையிட்ட ஆட்சியர், அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் அடிப்படை வசதிகள் மற்றும் அரசின் சலுகைகள் குறித்து மக்களிடம் கேட்டறிந்தார். மக்களின் தேவைகள் மற்றும் குறைகளை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்ட அவர், அவற்றை விரைந்து நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த ஆய்வின்போது, ஊராட்சிகள் மற்றும் தணிக்கை பிரிவு உதவி இயக்குநர் நந்தகோபால கிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். ஆட்சியர் நேரடியாக வந்து தங்களின் குறைகளைக் கேட்டறிந்தது அப்பகுதி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரேசன் கார்டு குறைதீர் சிறப்பு

முகாம்: ஜூலை 11-ல் நடைபெறுகிறது உளுந்தூர்பேட்டை, ஜூலை 10- உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில், குடும்ப அட்டை (ரேசன் கார்டு) தொடர்பான குறை களைத் தீர்ப்பதற்கான சிறப்பு முகாம் ஜூலை 11-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழ மையான இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புகைப்படம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வட்ட வழங்கல் அலுவலர் இளைய ராஜா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் ஜூலை 13 முதல் அனைத்து புறநகர் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கம்

திருவண்ணாமலை, ஜூலை 10 – திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலை யம்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இதில், கூடுதல் பேருந்துகள் நிறுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததால், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, திருச்சி, மதுரை, நாகர்கோவில் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட வழித்தடங்களுக்குச் செல்லும் புறநகர் பேருந்துகள் மட்டுமே புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. வேலூர், ஆரணி, காஞ்சிபுரம், வந்தவாசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஓசூர், பெங்களூரு, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், சித்தூர் மற்றும் திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. தற்போது, புதிய பேருந்து நிலையத்தில் கூடுதல் பேருந்துகள் நிறுத்துமிடத்திற்கான அனைத்துப் பணிகளும் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனால், இரண்டு இடங்களில் பேருந்து நிலை யங்கள் செயல்படுவதால் பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, திருவண்ணாமலையிலிருந்து இயக்கப்படும் அனைத்துப் புறநகர் பேருந்துகளும், வரும் ஜூலை 13-ஆம் தேதி முதல் புதிய கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்தே இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் தெரிவித்துள்ளார்.

1.25 டன் ரேசன் அரிசி பறிமுதல்

கடலூர், ஜூலை 10- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே காட்டுமயிலூர் சாலையில், கடத்த முயன்ற 1.25 டன் ரேசன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை சிஐடி போலீசார் வெள்ளிக்கிழமை பறி முதல் செய்தனர். விசாரணையில், கோரக்காவடியைச் சேர்ந்த மணிகண்டன் ரேசன் அரிசியைச் சேகரித்து கோழிப்பண்ணைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. சோதனையின் போது வாகன ஓட்டுநர் தப்பியோடினார். தலைமறைவான மணிகண்டனை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ரேசன் கார்டு குறைதீர் சிறப்பு முகாம்:

ஜூலை 11-ல் நடைபெறுகிறது உளுந்தூர்பேட்டை, ஜூலை 10- உளுந்தூர்பேட்டை வட்ட வழங்கல் அலுவலகத்தில், குடும்ப அட்டை (ரேசன் கார்டு) தொடர்பான குறை களைத் தீர்ப்பதற்கான சிறப்பு முகாம் ஜூலை 11-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மாதத்தின் இரண்டாவது சனிக்கிழ மையான இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாம் நடைபெறும். இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், புகைப்படம் மற்றும் முகவரி மாற்றம் போன்ற திருத்தங்களைச் செய்து கொள்ளலாம். புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வட்ட வழங்கல் அலுவலர் இளைய ராஜா தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.