சென்னை விரைவு செய்திகள்
24 Sept 2026, 2:19 am

சென்னை விரைவு செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை ஐடிஐ மாணவன் கைது

கடலூர், செப். 23-கடலூர் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.கடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி, நேற்று உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில்கிடந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் சிறுமியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருக்கலாம் என தெரிவித்ததாககூறப்படுகிறது.

இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது ஐ.டி.ஐ.மாணவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, அவனை போலீசார் கைது செய்தனர். பின்னர்இளஞ்சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி, கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.இதற்கிடையே சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் திரண்டனர்.இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

தங்கம் விலை குறைந்தது!

சென்னை, செப்.23-சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,135-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-க்கும் விற்பனையானது. அதேபோல், 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.15,420-ஆகவும், 18 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,905-ஆகவும் வர்த்தகமானது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது.

பயிர் காப்பீடு செய்யவிவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

கடலூர், செப்.23-பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கடலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண்மை இணை இயக்குநர் பூ. வசந்தா கேட்டுக்கொண்டுள்ளார். இத்திட்டம் ஹெச்டிஎப்சி இஆர்ஜிஓ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.584 பிரீமியம் செலுத்தி நவ.16க்குள்ளும், மக்காச்சோளத்திற்கு ரூ.399 செலுத்தி அக்.31க்குள்ளும், பருத்திக்கு ரூ.464 செலுத்தி நவ.16க்குள்ளும் பதிவு செய்ய வேண்டும்.

கடன் பெறும் விவ சாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கி மூலமாகவும், கடன்பெறாதவர்கள் பொது சேவை மையங்கள், வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக வும் பதிவு செய்யலாம்.பதிவு விண்ணப்பம், சிட்டா, இ-அடங்கல்/அடங்கல், அடையாள அட்டை நகல், e-KYC பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக் கணக்குப் புத்த கத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

புதுச்சேரியில் புதிய வாகன பதிவிற்கான எண்கள் ஏலம் போக்குவரத்துதுறை அறிவிப்பு

புதுச்சேரி, செப்.23-புதிய வாகன பதிவிற்கான எண்கள் ஏலம் நடைபெறுவ தாக புதுச்சேரி போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

புதுச்சேரி போக்குவரத்து துறையின் PY-02 AA (காரைக்கால்) வரிசையில் உள்ள https://parivahan.gov.in/fancy இணைய தளத்தில் 30.09.2026 காலை 11.00 மணி முதல் மாலை 4.30 வரை ஏலம் விடப்பட உள்ளது.

இந்த E-Auction முறையில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான வழிமுறைகள் மற்றும் ஏல நிபந்தனை களை 24.09.2026 முதல் https://transport.py.gov.in என்ற இணைய தள முகவரியில் பார்த்தும்/ மற்றும் பதிவு இறக்கமும் செய்துகொள்ளலாம். இந்த ஏலம் சம்பந்தப்பட்ட பண பரிவர்த்தனை அனைத்தும் இணைய தளம் வாயிலாக மட்டும் பெறப்படும். நேரிலோ மற்றும் காசோலையாகவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

சரியான உணவின் மூலம் புரதத்தின் தேவையை சரிசெய்ய முடியும் ஊட்டச்சத்து மருத்துவர்கள் சங்கம் தகவல்

மதுரை, செப்.23-இந்தியாவில் புரதம் குறித்த விவாதங்கள் உணவுப் பொட்டலங்களில் குறிப்பிடப்படும் புரத அளவுகளுக்கு மட்டுமேஅதிக முக்கியத்துவம் அளிக்கின்றன; மாறாக, உணவின் பன்முகத்தன்மை, போதுமான கலோரி மற்றும் தனிப்பட்ட நபர்களின் தேவைகளுக்கு போதியகவனம் செலுத்தப்படுவதில்லை என்று இந்திய ஊட்டச்சத்து மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தேசிய ஊட்டச்சத்து வாரத்தை முன்னிட்டு தாவர அடிப்படையிலான உணவில் புரதம் குறித்த மறுசிந்தனை என்றதலைப்பில் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. உணவின் மூலம் புரதத் தேவையைச் சரியான முறையில் பூர்த்தி செய்வதற்கு 7 நடைமுறை வழிமுறைகளை இந்தஅறிக்கை முன்வைக்கிறது. வயது, உடல்நிலை மற்றும் தேவைகளின் அடிப்படையில் புரதத் தேவையைத்துல்லியமாக வரையறுக்கவேண்டும். தற்போது பின்பற்றப்படும் ஒட்டுமொத்த உணவு முறையை மதிப்பீடு செய்து உடலுக்குப் பொருத்தமான புரதஇலக்கை நிர்ணயிக்கவேண்டும்.

உணவுத் திட்டமிடல்

பல்வேறு வகையான புரதச்சத்து நிறைந்த உணவுகளைக் கொண்டு உணவைத் திட்டமிடுதல். சமையல் முறை: சரியான சமையல் மற்றும் பதப்படுத்தும் முறைகள் மூலம் புரதத்தின் செரிமானத்திறனை மேம்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, ஊட்டச்சத்துடன் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளையும் இணைக்க வேண்டும்.

துணைப் பொருட்கள்: உணவின் மூலம் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்ய முடியாத சூழலில் மட்டும் தேவைக்கேற்ப ஊட்டச்சத்து துணைப் பொருட்களைப் பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.