தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

17 Jul 2026, 12:19 am
சென்னை விரைவு செய்திகள்

மர்ம விலங்கின் கால்தடம் கண்டுபிடிப்பு தென்னம்பாக்கத்தில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

கடலூர், ஜூலை 16– கடலூர் அருகே உள்ள தென்னம்பாக்கம்–கம்பளி காரக்குப்பம் சாலையோரத்தில் மர்ம விலங்கின் கால்தடங்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையோரத்திலுள்ள கரும்புத் தோட்டத்தை ஒட்டிய பகுதியில் பதிவாகியிருந்த பெரிய அளவிலான கால்தடங்களைக் கண்ட மக்கள், இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள், அந்தக் கால்தடங்களை நேரில் ஆய்வு செய்தனர். இவை புலி, சிறுத்தை அல்லது வேறு ஏதேனும் காட்டு விலங்கினுடையதா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்கள், புதர்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாகத் தோட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஏதேனும் காட்டு விலங்குகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் மீண்டும் வலுவாக களமிறங்கும் ஒனிடா

சென்னை, ஜூலை 16- இந்தியாவின் மின்னணுச் சந்தையில் 80 மற்றும் 90களில் முன்னணியில் இருந்த ஒனிடா நிறுவனம், தனது வணிகத்தை மீண்டும் வலுப்படுத்தப் புதிய வியூகங்களை வகுத்துள்ளது. வரும் ஐந்து ஆண்டுகளில் தனது வணிகத்தை ஐந்து மடங்கு அதிகரிக்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் சர்வதேச நிறுவனங்களின் போட்டியால் சந்தையில் பின்தங்கியதை ஒப்புக்கொண்ட ஒனிடா, தற்போது தனது வணிக முறையை முழுமையாக மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, ஒப்பந்த அடிப்படையில் பிற நிறுவனங்களுக்காகப் பொருட்கள் தயாரிக்கும் முறையைக் கைவிட்டு, ஒனிடா என்ற சொந்தப் பெயரில் மின்னணுப் பொருட்களைத் தயாரிப்பதில் மட்டும் முழு கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளது. இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குஞ்சன் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “எங்கள் முக்கியத் தயாரிப்புகளை வலுப்படுத்துவது, புதிய தயாரிப்புகளை உருவாக்குவது மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை மேம்படுத்துவது போன்றவற்றில் கவனம் செலுத்துகிறோம். பிரத்யேக விற்பனையகங்களை விரிவுபடுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுடன் மீண்டும் வலுவான பிணைப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார். ஒரு காலத்தில் இந்திய இல்லங்களில் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்த ஒனிடா, தனது இந்த ‘மீள் வருகை’ முயற்சி மூலம் மீண்டும் சந்தையை கைப்பற்ற தயாராகி வருகிறது.

கல்லூரி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட செல்போன்

சென்னை, ஜூலை 16– ஐக்யூஓஓ தனது புதிய ‘இசட் 11 லைட்’ ஸ்மார்ட்போனை ஜூலை 23-ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. கல்லூரி மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இதில், பாடப்பணிகளை எளிதாக்கும் ஏஐ (AI) அம்சங்கள், 6500mAh பேட்டரி மற்றும் 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளன. மிலிட்டரி தரத்திலான உறுதித்தன்மை கொண்ட இந்த போன், 5 வருட பேட்டரி ஆரோக்கியத்தையும், 4 வருட பாதுகாப்பு அப்டேட்களையும் வழங்குகிறது. சோலார் பிளேம் மற்றும் மிட்நைட் புளூ ஆகிய வண்ணங்களில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இது தயாராகிறது. நவீன வசதிகளுடன் கூடிய இந்த போன் மாணவர்களின் அன்றாடத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.