சென்னை விரைவு செய்திகள்
17 May 2026, 2:00 am

கலசப்பாக்கம் அருகே மாடு விடும் விழா காளைகள் சீறிப்பாய்ந்தன!

திருவண்ணாமலை, மே 16: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கங்கவரம் கிராமத்தில், கூழ் ஊற்றும் திரு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு காளை விடும் திருவிழா சனிக்கிழமை(மே16) மிக விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் திருவண்ணாமலை, வேலூர், கிருஷ்ண கிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆக்ரோஷமான காளை மாடுகள் பங்கேற்றன. எல்லையை நோக்கி மாடுகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட போது, அவை பொதுமக்களின் உற்சாக கோஷங்களுக்கு இடையே சீறிப்பாய்ந்து ஓடின. குறிப்பிட்ட இலக்கை மிகக் குறைந்த வினாடிகளில் கடந்து, சீறிப்பாய்ந்து ஓடி வெற்றி பெற்ற காளை மாடு களின் உரிமையாளர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் அரிய பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப் பட்டன. இந்த விறுவிறுப்பான காளை விடும் விழாவைக் காண்பதற்காகக் கலசப்பாக்கம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழைய சிக்கன் குழம்பு சாப்பிட்ட 3 வயது குழந்தை பரிதாப பலி

மற்றொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை!

திருப்பத்தூர், மே 16: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பழைய சிக்கன் குழம்பைச் சாப்பிட்ட மூன்று வயதுக் குழந்தை பரிதா பமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத் தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், வீட்டில் சமைத்து மீதமிருந்த பழைய சிக்கன் குழம்பு உணவை வளர்ப்பு நாய்க ளுக்கு வைப்பதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த குழந்தைகள் எதிர்பாராதவிதமாக அந்த உணவை எடுத்துச் சாப்பிட்டதாகத் தகவல் தெரிவிக்கப்படு கிறது. பழைய உணவைச் சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே குழந்தைகளுக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதில், பூமிகா (3) என்ற பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், ரேணுகா என்ற ஒரு வயதுக் குழந்தைக்கு உடல்நிலை மிகவும் மோச மடைந்ததை அடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடைக்காலத்தில் பழைய உணவுகள் விரை வில் நச்சுத்தன்மையாக மாற வாய்ப்புள்ளதால், பொது மக்கள் உணவுகளைக் கையாள்வதில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதைத் தடுக்க முயற்சி

தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் சுட்டெரித்து வருவதால், வனப்பகுதியில் உள்ள இயற்கை நீர்நிலைகள் மற்றும் ஓடைகள் முற்றிலும் வற்றிவிட்டன. இதனால் வனவிலங்குகள் தங்களின் தாகத்தைத் தணிக்கத் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி, காட்டை விட்டு வெளி யேறி அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதி களுக்குள் நுழைவது வழக்கமாக உள்ளது. அவ்வாறு வரும் போது, அவை சாலைகளைக் கடக்க முயன்று வாகனங் களில் அடிபட்டும், விவசாயக் கிணறுகளில் தவறி விழுந்தும் உயிரிழக்கும் சோக நிகழ்வுகள் தொடர்கதை யாகி வருகின்றன.

வனத்துறை அதிகாரிகள் தகவல்

இந்த அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க, திருப்பத்தூர் மாவட்ட வனக்கோட்டம் சார்பில் வனப் பகுதியின் பல்வேறு இடங்களில் தண்ணீர் குட்டைகள் அமைக் கப்பட்டு உள்ளன.

விபத்தில் கணவர், மகளை பறிகொடுத்த பெண்ணுக்கு இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, மே 16: நெடுஞ்சாலை விபத்தில் கணவர் மற்றும் மருத்துவ மகளைப் பறிகொடுத்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்கத் தனியார் இன்சூரன்ஸ் நிறு வனத்திற்குச் சென்னை மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மருந்தக உரிமையாளர் பாஸ்கர் (61), பியூட்டி பார்லர் நடத்தும் அவரது மனைவி ஜோதிகா (49), மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவரான மகள் ஷோபிகா (26) ஆகி யோர் கடந்த 2023 மே 14 அன்று ஏலகிரி சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டி ருந்தனர். இரவு 9 மணியளவில் இருங் காட்டுக்கோட்டை சிப்காட் அருகே வந்த போது, அதிவேகமாக வந்த சரக்கு லாரி கார் மீது மோதியது. இதில் பாஸ்கர், ஷோபிகா இருவர் உயிரிழந்தனர். ஜோதிகா 34% ஊன மடைந்தார். இழப்பீடு கோரி ஜோதிகா தொடர்ந்த 3 வழக்குகளை விசாரித்த முதன்மை நீதிபதி ஏ.நசீர் அகமது, லாரி ஓட்டுநரின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் எனக் கூறி, மருத்து வர் மகளின் இறப்பிற்கு ரூ.1.29 கோடி, கணவரின் இறப்பிற்கு ரூ.17.24 லட்சம், ஜோதி காவின் பாதிப்பிற்கு ரூ.13.58 லட்சம் என மொத்தம் ரூ.1,60,72,100-ஐ 7.5% வட்டியுடன் வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அதிரடி உத்தரவிட்டார்.