தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 hours before
சென்னை விரைவு செய்திகள்

சென்னை விரைவு செய்திகள்

கார் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை

பலிதிருவண்ணாமலை,ஆக24-திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே புனலப்பாடி கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜின் 2 வயது மகன்அகிலேஷ். சம்பவத்தன்று வீட்டின் அருகே நிறுத்தப்பட்டி ருந்த காரின் பின்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது காரின் உரி மையாளரும், ஓட்டுநருமான ஜீவா, காரின் பின்புறம் குழந்தை இருப்பதை கவனிக்காமல் காரை பின்நோக்கி இயக்கியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக காரின் பின்பக்க சக்கரம் குழந்தை மீது ஏறியதில், அகிலேஷ் படுகாயமடைந்தான்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காரை நிறுத்தச் செய்து, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்து வர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, காரை ஓட்டிய ஜீவாவிடம் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்புமாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

கள்ளக்குறிச்சி, ஆக.24-கள்ளக்குறிச்சி நகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் பத்மஜா ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ன் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் கடந்த 1ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது.

கள்ளக்குறிச்சி நகராட்சி கே.பி.ஆர். நகரில் நடைபெற்ற இப்பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பத்மஜா, பணிகளை விரைந்து முடிக்கவும், 100 சதவீதம் துல்லியமாக இருக்க வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பள்ளி வாகனம் விபத்தில் சிக்கியது

3 மாணவர்கள் காயம்கள்ளக்குறிச்சி, ஆக.24 -கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 மாணவர்கள் காயமடைந்தனர்.

எலவனாசூர்கோட்டையில் பாரத் நடுநிலைப்பள்ளி உள்ளது. கல் சிறுநாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40 மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு, பள்ளிப் பேருந்து திங்களன்று காலை பாரத் நடுநிலைப்பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் விக்னேஷின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் பக்கவாட்டில் உள்ள காப்புக் காட்டுக்குள் சுமார் 30 மீட்டர் தூரம் புகுந்து நின்றது.

இந்த விபத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் 3 பேர் காயமடைந்தனர். மூவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, ஆக.24-திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி வரும் 28.08.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. இதில், அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

எனவே, இந்த சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.