10-ஆம் வகுப்பு தேர்வில் சென்னை எவர்வின் பள்ளி 100% தேர்ச்சி சாதனை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு
21 May 2026, 1:45 am
<p><strong>10-ஆம் வகுப்பு தேர்வில் சென்னை எவர்வின் பள்ளி 100% தேர்ச்சி சாதனை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் பரிசு</strong></p><p>சென்னை, மே 20- பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை கொளத் தூரில் உள்ள எவர்வின் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்பள்ளியில் இருந்து இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதிய 447 மாணவ, மாணவிகளும் முழுமை யாகத் தேர்ச்சி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர். தொடர்ந்து 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வரும் இம்மாணவர்களை ஊக்கு விக்கும் விதமாகவும், பசு மையை வலியுறுத்தும் வகை யிலும், தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் குவித்த சாதனையாளர்களுக்குப் பள்ளியின் சார்பில் மரக் கன்றுகள் பரிசாக வழங்கப் பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பள்ளி யின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியர் முதல்வர் புருஷோத் தமன், முதல்வர் சர்மிளா மற்றும் துணை முதல்வர் நிலவரசி ஆகியோர் நேரில் இனிப்புகள் வழங்கி தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரி வித்தனர். சாதனை படைத்த எவர்வின் பள்ளி மாணவர் களுக்குப் பல்வேறு தரப்பி லிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.</p>
