தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரிய நோயால் பாதிக்கப்பட்ட ரஷ்ய குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

4 Nov 2026, 11:52 pm
அரிய நோயால் பாதிக்கப்பட்ட ரஷ்ய குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

அரிய நோயால் பாதிக்கப்பட்ட ரஷ்ய குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த சென்னை மருத்துவர்கள்

சென்னை,நவ. 4-உடலின் செல்களில் ஏற்படும் அசாதாரண பெருக்கத்தால் உருவாகும் ‘லாங்கர்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைடோசிஸ்’ என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட 15 மாத ரஷ்யகுழந்தைக்கு சென்னை மருத்துவர்கள் மறுவாழ்வு அளித்துள்ளனர்.

இக்குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை தேவைப்படும் நிலை இருந்தது. ஆனால், சென்னை சூளைமேடு எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் பல்துறை மருத்துவக் குழுவின் கூட்டு முயற்சியால், நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை இல்லா

மலேயே குழந்தைக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.தீவிர நுரையீரல் பாதிப்பு, தொடர்ச்சியான நுரையீரல்சுருக்கம் (நுரையீரலைச் சுற்றியுள்ள பகுதியில் காற்று கசிவதால் ஏற்படும் பாதிப்பு) மற்றும் மூச்சுவிடுவதில் கடுமையான சிரமம் காரணமாக, இருபுறமும்நுரையீரல் மாற்றுஅறுவைசிகிச்சை செய்வதற்காகவே இந்தக் குழந்தை ரஷ்யாவில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டிருந்தது.

நோயறிதல் மற்றும் சிகிச்சைக்காக முழு நுரையீரலையும் அகற்றாமல், பாதிக்கப்பட்ட நுரையீரல் திசுவின் ஒரு பகுதியை மட்டும் அகற்றும்‘தொராஸ்கோபிக்’ என்ற நுண்துளை அறுவைசிகிச்சையும் செய்யப்பட்டது.இத்தகைய தீவிர சிகிச்சைகள் மற்றும்தொடர் கண்காணிப்பிற்குப்பிறகு, குழந்தையின்சுவாசநிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, தற்போது குழந்தைநலமாகஇருக்கிறது. இனி குழந்தைக்கு நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய தேவையில்லை என்று மருத்துவமனையின் நுரயீரல் மாற்று அறுவைசிகிச்சை மையத்தின் இயக்குநர் டாக்டர் கே.ஆர். பாலகிருஷ்ணன் கூறினார். 15 மாத குழந்தை என்பதால் சிகிச்சை பெரும்சவாலாக இருந்தது என்றும்அவர் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.