தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் 6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

4 Nov 2026, 11:51 pm
தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து  இன்று முதல் 6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து இன்று முதல் 6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை,நவ.4-தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வியாழக்கிழமை முதல்சென்னையிலிருந்து தினமும்சுமார் 6 லட்சம் பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, தெற்கு ரயில்வேயும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையும்கூடுதல் சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்கத் தயார்நிலையில் உள்ளன. ரயில்வே பல்வேறு இடங்களுக்குச் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள நிலையில், அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் அரசுப் பேருந்துகளுக்கான தினசரிமுன்பதிவு வரம்பு 1.35 லட்சத்தில்இருந்து 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள பொதுப் போக்குவரத்து வசதிகளின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில்நிலையங்களில் இருந்து புறப்படும் 3.65 லட்சம் பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசுப் பேருந்துகள் மூலம் 1.75 லட்சம் பயணிகளும், தனியார் ஆம்னிபேருந்துகள் மூலம் 60,000 பயணிகளும் பயணிப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சார்பில்சென்னையிலிருந்து கன்னியாகுமரி, செங்கோட்டை, இராமநாதபுரம், திருவனந்தபுரம் மற்றும் பிற இடங்களுக்குவியாழக்கிழமை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பவுள்ளன. மறுபுறம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சார்பில் நவம்பர் 5 முதல் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்குவதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்துப்போக்குவரத்துத் துறைச்செயலாளர் எல். நிர்மல் ராஜ் தெரிவிக்கையில், கூடுதல் பேருந்துகளின் எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகபேருந்துகளுக்கான தினசரி முன்பதிவு வரம்பு 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், நவம்பர் 5 முதல்7 வரையிலான நாட்களுக்கு இதுவரை 79,414 பயணிகள் முன்பதிவுசெய்துள்ளதாகவும், அதில் நவம்பர்6-ஆம் தேதிக்கு மட்டுமே 39,100 பேர் முன்பதிவு செய்துள்ளனர் என்றும்அவர் குறிப்பிட்டார்.சிறப்புச் சேவைகள் உட்பட மொத்தம் 10,600 பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்துமுனையங்களில் இருந்து இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து 98 ரயில்களும், எழும்பூர் மற்றும் தாம்பரத்தில் இருந்து 85 ரயில்களும்இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் ஒரு ரயிலில் 1,800 பயணிகள் பயணிக்கும் நிலையில், பண்டிகைக் காலத்தில் அது 1,900 முதல் 2,000 வரை உயர்கிறது என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறிப்பாக சென்னை, பெங்களூரு, கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி மற்றும் திருவனந்தபுரம் இடையே இயங்கும் ரயில்களில் அதிகக் கூட்டம் காணப்படுகிறது. வழக்கமான சேவைகள் தவிர, நாகர்கோவில், கன்னியாகுமரி, தென்காசி, இராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களுக்கு நவம்பர் 5 முதல் சுமார் 10 சிறப்பு ரயில்கள்இயக்கப்படவுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.