சென்னை விரைவு செய்திகள்
25 Sept 2026, 1:03 am

கணவர் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

கடலூர், செப்.24-பண்ருட்டி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவர் ஜெகதீசனை (40) மண்வெட்டியால் வெட்டிக்கொலை செய்த மனைவி நதியா (38), அவருடைய நண்பர் கோவிந்தராசு (52) ஆகி யோருக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.கடந்த 2021 செப்.18 அன்று இருவரும் சேர்ந்து ஜெகதீசனை கொலை செய்ததாக காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசா ரணை முடிவில் குற்றம் நிரூ பிக்கப்பட்டதால், இருவருக்கும்ஆயுள் தண்டனையும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வுநீதிமன்ற நீதிபதி சரஸ்வதி தீர்ப்ப ளித்தார்.

மாயமான இளைஞர்கள் சடலமாக மீட்பு

கடலூர், செப்.24-நெல்லிக்குப்பம் அருகே பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சபரிகிரி (20), விஷ்வா (20) ஆகியோர் கடந்த 21ஆம் தேதிபெத்தாங்குப்பத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.இதுகுறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லைஎனக் கூறி, அவர்களது உறவி னர்கள் புதன்கிழமை இரவு மேல்பட்டாம்பாக்கத்தில் கடலூர்-நெல்லிக்குப்பம்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.இதற்கிடையே, கடலூர் அருகே ராமாபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையோர வடி கால் வாய்க்கால் அருகே இருவரும் சடலமாகக் கிடப்பதாக தகவல் கிடைத்தது. திருப்பா திரிப்புலியூர் போலீசார் உடல்களை மீட்டு கடலூர் அரசுமருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்தில் உயிரிழந்தார்களா அல்லது வேறு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வீட்டுவசதி வாரியம்: புதிய குடியிருப்புகளுக்கான ஆன்லைனில் பதிவு

சென்னை, செப். 24 –வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் அறி வித்த புதிய குடியிருப்புத்திட்டங்களுக்குப் பொது மக்க ளின் தேவையை அறியும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.2026-2027 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கை அறி விப்பின்படி, மாநிலத்தின் பல்வேறு முக்கியப் பகுதிகளில்சுயநிதித் திட்டத்தின் கீழ் புதிய குடியிருப்புகள் கட்டப்பட வுள்ளன. அதன்படி, சென்னை அண்ணா நகர்,புரசைவாக்கம், நந்தனம், எர்ணாவூர், கடலூர் குண்டுசாலை, மதுரை எல்லீஸ் நகர், திருவள்ளூர் திருமழிசை மற்றும்கன்னியாகுமரி வல்லன்குமாரவிளை ஆகிய இடங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப குடியிருப்புகள்அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டங்களைச் செயல்படுத்தும் முன் மக்க ளின் விருப்பங்களை அறிய, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனதுஅதிகாரப்பூர்வ இணைய தளத்தில் (https://tnhb.tn.gov.in) பிரத்யேக இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. இதில்பொதுமக்கள் தங்கள் விருப்ப மான இடம் மற்றும் குடியிருப்பு வகை போன்ற விவரங்களைப் பதிவு செய்யலாம்.இந்தப் பதிவு தேவையை மதிப்பீடு செய்வதற்காக மட்டுமே தவிர வீடு ஒதுக்கீடு செய்வதற்கான முன்னுரிமைஅல்ல. எனினும், வெற்றிகரமாகப் பதிவு செய்பவர்க ளுக்குத் திட்டம் செயல்படுத்தப்படும் போது விண்ணப்பிக்கும் தேதி குறித்த விவரங்கள்குறுஞ்செய்தி மூலம் தெரி விக்கப்படும். எனவே, மேற்கண்ட பகுதிகளில் வீடு பெற விரும்பும் பொதுமக்கள்அனைவரும் வாரியத்தின் இணையதளத்தில் தங்களின் தேவையை விரைவாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடலூர் மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.24-கடலூர் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்தைகண்டித்தும், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மாநக ராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணி யாளர்கள்வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சுந்தரி ராஜா, திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆணையர் கிஷன்குமாரை சந்தித்து மனு அளித்தபோது இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினரும் காவல்துறையில் புகார் அளித்த நிலை யில், திமுக மாநகரச் செயலாளர் கே.எஸ்.ராஜாஉள்ளிட்டோர் மீது புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஆணையர் கிஷன்குமாருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப் பட்டுள்ளது.ஆணையர், மாநகராட்சி ஊழி யர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி யும், இதுபோன்ற சம்பவங்கள் இனிநடைபெறக்கூடாது என வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ச.சிவராமன் தலைமை தாங்கினார்.அனைத்து ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.புருஷோத்தமன் கண்டன உரையாற்றினார். ஏராளமானதொழிலாளர்கள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.