சென்னை விரைவு செய்திகள்
21 Jul 2026, 12:03 am

அண்ணனைத் தேடி வந்தவர் தம்பியைக்

கொன்றார் கடலூர், ஜூலை 20– கடலூர் மாவட்டம் வடலூர் அருகே சமத்துவ புரத்தில், முன்விரோதம் காரணமாக அண்ணனைத் கொல்ல வந்தவர் அவரது தம்பியை குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமத்துவபுரத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி தங்கதுரை (25). கட்டிட வேலை தொடர்பாக இவ ரது அண்ணன் ஏழு மலைக்கும், நண்பர் வீர மணிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு ஏழுமலையைத் தேடி கத்தியுடன் வந்த வீரமணி, அவர் இல்லாததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திர மடைந்து தங்கதுரையின் கழுத்தில் குத்தினார். இதில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த வடலூர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வீரமணியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தாயைக் கொன்ற மகன் கைது

சென்னை, ஜூலை 20- சென்னை பெருங்குடியைச் சேர்ந்த நகை அடகு கடை உரிமையாளர் பாபுலாலின் மனைவி சென்னிதேவி (46), தனது மகன் ராகேஷால் (19) படுகொலை செய்யப்பட்டார். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாததால் பெற்றோர் கண்டித்ததாலும், மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டிருந்த ராகேஷ், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு தூங்கிக்கொண்டிருந்த தாயை கொடூரமாகத் தாக்கினார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தாய் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துரைப்பாக்கம் காவல்துறையினர், சென்னிதேவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், மகன் ராகேஷைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, ஜூலை 20- சென்னையில் திங்களன்று (ஜூலை 20) ஆபரணத் தங்கம் (22 காரட்): கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை; ஒரு கிராம் 235 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி 2,35,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர், ஜூலை 20– கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்துப் பொதுமக்களிடம் இருந்து 736 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து உரிய நட வடிக்கை எடுக்கத் துறை அலுவலர்களுக்கு ஆட்சி யர் அறிவுறுத்தினார்.

விவோ 5ஜி ஸ்மார்ட்போன்

சென்னை, ஜூலை 20 இளம் தலைமுறையின ருக்காக விவோ இந்தியா நிறுவனம் தனது புதிய ‘விவோ டி5 லைட் 44டபிள்யூ 5G’ ஸ்மார்ட்போனை அறி முகப்படுத்தியுள்ளது. வேகமான வாழ்க்கை முறைக்கு ஏற்ப வடி வமைக்கப்பட்டுள்ள இதில் நீண்ட நேரம் உழைக்கும் 6500mAh பேட்டரி, செயற்கை நுண்ணறிவு ஆத ரவு கொண்ட அம்சங்கள் மற்றும் வலுவான உறுதித் தன்மை ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கல்வி, பொழுதுபோக்கு, ஆன்லைன் ஸ்ட்ரீமிங், உள்ளடக்க உருவாக்கம் மற்றும் பயணங்களின் போது பயன்படும் சிறந்த உற்பத்தித் துணையாக இது இருக்கும் என்று அந்நிறுவனத்தின் வணிகப் பிரிவு தலைமை அதி காரி பங்கஜ் காந்தி தெரி வித்துள்ளார்.