தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

14 Aug 2026, 1:55 am
சென்னை விரைவு செய்திகள்

பெண்ணுக்குப் பாலியல் தொல்லை

சென்னை, ஆக.13-சென்னை ராஜீவ் காந்தி சாலையில் உள்ள தனியார் கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகே ஐடி ஊழிய ரான 22 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லைஅளித்த தோரைப்பாக்கத்தைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் மணிகண்டன் (31) என்பவரைத் தோரைப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட குற்ற வாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது கடந்த மே 17-ம் தேதி யன்றும் மற்றொரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பழுதடைந்த சிசிடிவி கேமராக்கள்

சென்னை, ஆக.13-மூன்றாம் கண் திட்டம் மற்றும் நிர்பயா திட்டத்தின் கீழ் சென்னை முழுவதும் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்கள் பல பழுதடைந்து மரங்களால் மறைந்தும் செயலற்று கிடக்கின்றன. பெரம்பூர், ராமாபுரம், புரசை வாக்கம் மற்றும் வியாசர்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் அரசு கேமராக்கள் வேலை செய்யாததால், குற்றச் சம்ப வங்களின் போது பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள தனியார் கேமரா காட்சிகளை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உரிய புகார்கள் தெரிவிக்கப்பட்டாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இதுகுறித்துபதிலளித்துள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், அடுத்த இரண்டு மாதங்க ளுக்குள் முறையான தணிக்கை நடத்தப்பட்டு பழுதடைந்த கேமராக்கள் மாற்றப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

அரிசி ஆலை உரிமையாளர் மகன் கடத்தல்: 4 பேர் கைது!

சென்னை, ஆக. 13-காஞ்சிபுரம் மாவட்டம் சிறுவேரிப்பாக்கம் பகுதி யில், அரிசி ஆலை உரிமை

யாளர் ரவியின் மகன் சுரேந்தர் (34) என்பவரை மர்மக் கும்பல் காரில் கடத்திச் சென்று 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியது.

தகவலறிந்த காஞ்சிபுரம் காவல்துறையினர் உடனடியாகத் தனிப்படை

அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுரேந்தரைச் பத்திரமாக மீட்டனர். தப்பியோட முயன்ற

தமிழ்மணி, தமிழ் பிரபாகரன், சாந்தகிருஷ்ணன், ராகுல் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து காரும் இரண்டு கத்திகளும் பறி முதல் செய்யப்பட்டன. தலைமறைவான மற்றொரு நபரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது

சென்னை, ஆக. 13-லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது செய்யப்பட்டார். பொன்னேரி சார்பதி வாளர் அலுவலகத்தில் சொத்து ஆவணங்களை விடுவிக்க 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சார்பதி

வாளர் சங்கர் மற்றும் தனி யார் ஆவண எழுத்தர்கள் ரமேஷ், நித்யா ஆகியோரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் பொறி வைத்து அவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.