முந்தய பக்கம்

வியாசர்பாடி ஏரிகளைப் புனரமைக்க மாநகராட்சி புதிய திட்டம்

2 hours before
வியாசர்பாடி ஏரிகளைப் புனரமைக்க மாநகராட்சி புதிய திட்டம்
<p><strong>வியாசர்பாடி ஏரிகளைப் புனரமைக்க மாநகராட்சி புதிய திட்டம்</strong></p><p>சென்னை, ஆக. 21-ஒன்றிய அரசின் நகர்ப்புற சவால் நிதியைப் பயன்படுத்தி, வியாசர்பாடியில் உள்ள ஓல்டு குட்ஷெட் ரோடு ரயில்வேகுளம்மற்றும் கல்யாணபுரம் குளம் ஆகியவற்றைச்சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பொதுப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நிலத்தடி நீர் செறிவூட்டுதல், வெள்ளக் கட்டுப்பாடு மற்றும் பொதுமக்களுக்குப் பயன்படும் பகுதிகளை உருவாக்குதல் ஆகியவற்றைஇந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆக்கிரமிப்புகளால் சுருங்கியிருந்த ஓல்டு குட்ஷெட் ரோடு ரயில்வே குளம் தற்போது சுமார் 9.5 முதல் 9.64ஏக்கராக விரிவுபடுத்தப்பட்டு, நீர்த்தேக்கத் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, இப்பகுதிகளில் நடைபயிற்சி மற்றும் சைக்கிள் பாதைகள், குழந்தைகள் விளையாடும்இடங்கள், திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடங்கள், சூரிய ஒளி விளக்குகள் மற்றும் பார்வை மேடைகள்போன்ற பொது வசதிகளை உருவாக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், காலக்கெடுவுக்குட்பட்ட இந்தத் திட்டப் பணிகளை விரைவில் நிறைவேற்ற ஆலோசகர்களை நியமிக்கும் டெண்டர்கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram