தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறு ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திடக்கழிவு மேலாண்மை அதிகாரி தமிழக அரசு தலையிட கோரிக்கை

23 May 2026, 12:28 am
சிறு ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திடக்கழிவு மேலாண்மை அதிகாரி தமிழக அரசு தலையிட கோரிக்கை
<p><strong>சிறு ஒப்பந்ததாரர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் திடக்கழிவு மேலாண்மை அதிகாரி தமிழக அரசு தலையிட கோரிக்கை</strong></p><p>சென்னை, மே 22- சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் துறையில், உள்ளூர் சிறு ஒப்பந்ததாரர்களைப் புறக்கணித்துவிட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்குச் சாதக மாக விதிகளை மீறி டெண்டர் வழங்கப்பட்ட தாகப் புகார் எழுந்துள்ளது. இதில் திடக்கழிவு மேலாண்மைத் துறை செயற்பொறியாளர் விஜய் அரவிந்த் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த ‘ஜிக்மா குளோபல் என்விரான் சொல்யூஷன்ஸ்’ நிறுவனம் கூட்டுச் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அண்மையில் சென்னை மாநகராட்சி ஆணையர் மாற்றப்பட்ட நிர்வாக இடை வெளியைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திய அதிகாரிகள், அம்பத்தூர் அத்திப்பட்டில் பயோ-மைனிங் முறையில் கழிவுகளை அகற்றும் பணிக்கான டெண்டரை விதிகளுக்குப் புறம்பாக முன்தேதியிட்டு ஜிக்மா நிறுவனத்திற்கு வழங்கியதாகக் கூறப்படுகிறது. மெட்ரிக் டன்னுக்கு ரூ.986 என நிர்ணயம் செய்யப்பட்டு, சுமார் ரூ.7 கோடியே 10 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் முறைகேடாகத் தாராளம் காட்டப்பட்டுள்ளதாகவும், இதன் பின்னணியில் பல கோடி ரூபாய் கைமாறியிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும், அரசு விதி களின்படி 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாறுதல் செய்யப்பட வேண்டிய செயற்பொறியாளர் விஜய் அரவிந்த், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வருவது எப்படி என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பி.எப் தொகையில் முறைகேடு? டேண்டர் கோரப்படும்போதே ஒப்பந்த கூலி தொழிலாளர்களுக்கு பிஎப் தொகை பிடித்தம் செய்வது குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவேண்டும் என் விதி மீறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம், உள்ளூர் ஒப்பந்ததாரர்களிடம் தினக்கூலியாக ரூ.550-க்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்குப் பி.எஃப் பிடித்தம் செய்ய இத்துறையின் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், ஒரு பகுதி ஒப்பந்தப் பணியாளர்களின் பி.எப் தொகையைத் தொழிலாளர் வாரி யத்திற்குச் செலுத்தாமல் முறைகேடு செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதேநேரம், உள்ளூர் சிறு ஒப்பந்ததாரர்கள் தங்களது பணிகளைச் செய்ய முற்படும்போது நிர்வாக ரீதியாகப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது. முதலமைச்சர் தலைமையிலான புதிய அரசு நிர்வாகத்தைச் சீரமைக்க முயன்று வரும் வேளையில், இதுபோன்ற அதிகாரிகளின் செயல்பாடுகள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனப் பொது மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே, இந்த முறைகேடான டெண்டரை உடனடியாக ரத்து செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரி விஜய் அரவிந்த் மற்றும் ஜிக்மா நிறுவனம் மீது மாநில அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக செயல்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.