தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை மாநகராட்சி பள்ளி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்

8 Jun 2026, 11:10 pm
சென்னை மாநகராட்சி பள்ளி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்
<p><strong>சென்னை மாநகராட்சி பள்ளி ஊழியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்</strong></p><p>சென்னை, ஜூன் 8- சென்னை மாநகராட்சிப் பள்ளி ஊழி யர்களின் நீண்ட நாள் சம்பளப் பிரச்சனைக்கு அதிகாரிகள் தரப்பில் தற்காலிகச் சமரசத் தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 9 அன்று நடைபெறவிருந்த காத்தி ருப்புப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப் படுவதாகச் சென்னை பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு) அறி வித்துள்ளது. மாநகராட்சிப் பள்ளி களில் பணியாற்றும் ஊழி யர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதச் சம்பளம் மறுக்கப் படுவதைக் கண்டித்து, ஜூன் 9-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தச் சங்கம் முடி வெடுத்திருந்தது. இதன் எதிரொலியாக, தண்டையார்பேட்டை புத்தா செட்டி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அவசரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் வசந்தி தலைமையிலான அதிகாரி கள் மற்றும் சங்க நிர்வாகி கள் இதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஆர்.லோகநாதன், வெ.ரவிக்குமார், கோ.மனோ கரன், வெங்கட லஷ்மி, தேன்மொழி, மோகனா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஊழியர்க ளின் நியாயமான கோரிக்கை களை முன்வைத்தனர். இப்பேச்சுவார்த்தையின் முடிவில், நடப்பு மே மாதத்தில் பணிபுரிந்த ஊழி யர்கள் அனைவருக்கும் முழுச் சம்பளம் வழங்க அதி காரிகள் ஒப்புக் கொண்ட னர். மேலும், தற்போது நடை முறையில் உள்ள 11 மாத கால சம்பள முறையை மாற்றி, ஆண்டு முழுவதும் 12 மாதங்களும் வேலை யும் சம்பளமும் வழங்கு வதற்கான புதிய அரசா ணைக்குக் கல்வித்துறை சார்பில் அரசுக்குப் பரிந்துரைக்கப்படும் என்றும் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. இந்த முதற்கட்ட வெற்றியைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டாலும், ஊழியர்களின் வாழ்வா தாரத்தைப் பாதுகாக்கும் முறையான அரசாணை அரசாங்கத்தால் அதி காரப்பூர்வமாக வெளி யாகும் வரை, தங்க ளது அடுத்தகட்ட நடவடிக்கை கள் தொடரும் என்று சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.