தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது ‘சமூக நீதிக்கு எதிரான அரசாணைக்கு பொது தொழிலாளர் சங்கம் கடும் எதிர்ப்பு

19 Jun 2026, 1:20 am
தூய்மை பணியாளர்களுக்கு  சம்பளம் வழங்கக் கூடாது ‘சமூக நீதிக்கு  எதிரான அரசாணைக்கு பொது தொழிலாளர் சங்கம் கடும் எதிர்ப்பு

தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கக் கூடாது ‘சமூக நீதிக்கு எதிரான அரசாணைக்கு பொது தொழிலாளர் சங்கம் கடும் எதிர்ப்பு

சென்னை, ஜூன் 18- சென்னை மாநகராட்சி பள்ளி தூய்மை பணியாளர் களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கக் கூடாது என்ற அர சாணை சமூக நீதிக்கு எதிரா னது என்பதை வலியுறுத்தி சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசை சந்தித்து அந்த அரசாணை 79 / 2017 ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை பொது தொழிலா ளர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.லோகநாதன் மனு அளித்தார்.

அந்த மனுவில், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பணிபுரியும் என்.யூ.எல்.எம். தூய்மை பணியாளர்களுக்கு “மே மாதம் பள்ளிகள் விடுமுறை என்பதால் சம்பளம் இல்லை” என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏழை மற்றும் விளிம்புநிலை ஊழியர்களைப் பாதிக்கும் இந்த உத்தரவு, தங்களின் “சமூக நீதி” மற்றும் “அனை வருக்குமான வளர்ச்சி” என்ற கொள்கைக்கு முரணாக உள்ளது. இந்த உத்தரவு மிகப்பெரிய சமூக அநீதி யாகும். இந்த பள்ளிகளில் பணி யாற்றும் தூய்மை பணியா ளர்களில் பெரும்பாலா னோர் பொருளாதார ரீதி யாக மிகவும் பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்க ளுக்கு வழங்கப்படும் சொற்ப சம்பளத்தை கொண்டே அவர்களது குடும்ப வாழ்வாதாரம், வாடகை, மருத்துவச் செலவு கள் நகர்கின்றன. ஒரு மாதம் சம்பளத்தை நிறுத்துவது என்பது, அவர்களை வட்டிக்குக் கடன் வாங்கும் சூழலுக்கும், வறுமைக் குழி க்கும் தள்ளும் செயலாகும்.

அரசு மற்றும் மாநகராட் சியின் நிரந்தரப் பணியா ளர்கள் அனைவருக்கும் மே மாத கோடை விடுமுறை யிலும் முழுச் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், அதே பள்ளிகளில் சமமாக உழைக்கும் தூய்மை பணி யாளர்களுக்கு மட்டும் சம்ப ளம் மறுக்கப்படுவது சம வேலைக்குச் சம ஊதியம் மற்றும் சமத்துவ உரிமைக்கு எதிரானது. இது உழைப்புச் சுரண்டலின் வடிவமாகும்.

பள்ளிகளுக்குத்தான் கோடை விடுமுறையே தவிர, பள்ளி வளாகத்தைப் பராமரிப்பதிலும், சேர்க்கை பணிகளிலும், அடுத்த கல்வி யாண்டிற்கான ஆயத்தப் பணிகளிலும் இந்த ஊழி யர்களின் பங்களிப்பு பெரி தும் தேவைப்படுகிறது. வேலை செய்யவில்லை என்று கூறி சம்பளத்தை மறுப்பது, அவர்களின் அத்தி யாவசியத் தேவையை நிராகரிப்பதாகும்.

பெண் தொழிலாளர்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல் மாநகராட்சிப் பள்ளி ஊழியர்களில் பெரும் பான்மையானோர் பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் ஆவர். குடும் பத்தின் ஒற்றைப் பொரு ளாதாரத் தூணாக இருக்கும் இந்த பெண் தொழி லாளர்களின் மே மாதச் சம்பளத்தை நிறுத்துவது, சமூக நீதியின் முக்கிய அங்கமான “பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் அநீதியாகும்

. எனவே, சமூக நீதியைக் காக்கும் மகத்தான பொறுப்பை ஏற்றுள்ள அமை ச்சர், இந்த விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, சென்னை மாநகராட்சிப் பள்ளி ஊழியர்களுக்கு மே மாதச் சம்பளம் இல்லை என்ற அரசாணை 79/ 2017 உத்தரவை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மற்ற அரசு ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் மே மாதத்திற்கான முழுச் சம்பளமும் தங்கு தடை யின்றி கிடைக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள் கிறோம் என அதில் கூறப்பட் டுள்ளது. இந்த சந்த்திப்பின் போது, நிர்வாகிகள் வெ.ரவி க்குமார், கோ.மனோகரன், தேன்மொழி, வெங்கட லட்சுமி, மோகனா ஆகியோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.