கண்ணியக்குறைவாக செயல்படும் ஆணையர் குமரகுருபரனை நீக்க வேண்டும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தல்
3 Mar 2026, 3:38 pm
<p><strong>கண்ணியக்குறைவாக செயல்படும் ஆணையர் குமரகுருபரனை நீக்க வேண்டும் சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம் வலியுறுத்தல்</strong></p>
<p>சென்னை, மார்ச் 3 - தொழிலாளர்களிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் மாந கராட்சி ஆணையர் குமரகுருபரனை நீக்க வேண்டுமென்று சென்னை மாந கராட்சி செங்கொடி சங்கம் வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ஜெ.பட்டாபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூய்மைத்தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று ஜன.12 அன்று 5 மற்றும் 6வது மண்டலங்களில் வேலை செய்த என்யுஎல்எம் தொழிலாளர்கள் அதே நிலையில் தொடருவார்கள். பணியின்றி இருக்கும் அனைவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அரசு அறிவித்தது. அப்போது, குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விருந்துடன் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. வேலைக்கு ஆட்களை எடுக்கும் பொறுப்பையும் அச்சங்கத்திடம் ஒப்படைத்து விட்டது. தொழிலாளர்களை பாகுபடுத்தும் இந்த நடவடிக்கையால் மாற்று சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் இரண்டு மாதமாக வேலையின்றி நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். 2011ம் ஆண்டு புறநகர் பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. அப்போது, அங்கு பல ஆண்டுகளாக வேலை செய்த 568 என்எம்ஆர் தொழிலாளர்களும் மாநக ராட்சியில் இணைக்கப்பட்டனர். குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் இணைக்கப்பட்டவர்கள், சிஐடியு தலையீட்டால் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். ஆனால், மாநகராட்சி நிரந்தர பணி வழங்க மறுத்து வந்தது. செங்கொடி சங்க உதவியுடன் வழக்கு நடத்தி வெற்றி பெற்ற 278 தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்பட்டனர். நீதி மன்றம் செல்ல முடியாத ஏழை தொழி லாளர்கள் அனைவருக்கும் நீதிமன்ற உத்திரவை பொருத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கோடை வெயிலில் போட முடியாத தரமற்ற சீருடை வழங்கி யிருப்பது, குப்பை அள்ளுவதற்கு வசதியான கூடை மற்றும் ஓடு வழங்காதது, சுத்தம் செய்ய இயலாத சவுல் உபகரணத்தை பயன்படுத்த வர்புறுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேச தொழிற்சங்கங்களை ஆணையர் குமரகுருபரன் சந்தித்தார். அப்போது, சங்க தலைவர்கள் சொல்லும் குறைகளை முழுமையாக கேட்காமல், தொழிலாளர்கள் அமர்ந்து பேசுவதை விரும்பாத உடல் மொழியில் மிக மோசமாகவும், கண்ணியக் குறைவாகவும் ஆணை யர் நடந்து கொண்டது மிகவும் அதிர்ச்சியளித்தது. 10 நாட்களுக்கு முன்பு ஆணையரை சந்திக்க சென்ற மற்றொரு சங்கத்தின் நிர்வாகியை ஒருமையில் பேசி, தற்காலிக நீக்கம் செய்துள்ளார். அமைச்சர் தலையீட்டின் பேரில் அது நிறுத்தி வைக்கப்பட்டது. தலித் தொழிலாளர்கள் உள்ள தொழிற்சங்க நிர்வாகிகளிடம் ஆணையரின் கண்ணியமற்ற அணுகுமுறை, தீண்டாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். சட்டப்பூர்வமாக சமத்துவத்தை யும், தனது அதிகாரத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டிய மிக முக்கிய பொறுப்பு வகிக்கும் ஆணையரின் செயல்பாடு, பொறுப்புக்கு உகந்ததாக இல்லை. எனவே, அவர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணையர் பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.</p>
