தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

27 Sept 2026, 2:38 am
ஒரு லட்சம் தெருநாய்களுக்கு  ரேபிஸ் தடுப்பூசி மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

ஒரு லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் தகவல்

சென்னை, செப். 26 –பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள ஒரு லட்சம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தள்ளார்.

வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை மாநகரை உருவாக்கிட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி (ரேபிஸ்), அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் திட்டம் செப்.11 அன்று தொடங்கப்பட்டது.

இந்த சிறப்பு முகாம் வாயிலாக திருவொற்றியூர் மண்டலத்தில் 12 ஆயிரத்து 300, மணலி மண்டலத்தில் 7ஆயிரத்து 200, மாதவரம் மண்டலத்தில் 15 ஆயிரம், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 12 ஆயிரத்து 500, ராயபுரம் மண்டலத்தில் 8 ஆயிரத்து 600, அம்பத்தூர் மண்டலத்தில் 22 ஆயிரம், அண்ணாநகர் மண்டலத்தில் 12 ஆயிரம், ஆலந்தூர் மண்டலத்தில் 4 ஆயிரத்து 300 தெருநாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தற்போது, கோடம்பாக்கம், திரு.வி.க நகர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் முகாம் நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் மண்டலத்தில் 3 ஆயிரத்து 300, திரு.வி.க நகர் மண்டலத்தில் 2 ஆயிரத்து 600, பெருங்குடி மண்டலத்தில் 770 தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி செப்.25 வரை ஒரு லட்சம் நாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.