தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை மாநகராட்சியில் திட்ட பணியாளர்களுக்கான சம்பளத்தை மாதத்தின் முதல் தேதியே வழங்கிடுக

9 Jul 2026, 11:22 pm
சென்னை மாநகராட்சியில் திட்ட பணியாளர்களுக்கான சம்பளத்தை மாதத்தின் முதல் தேதியே வழங்கிடுக
<p><strong>சென்னை மாநகராட்சியில் திட்ட பணியாளர்களுக்கான சம்பளத்தை மாதத்தின் முதல் தேதியே வழங்கிடுக</strong></p><p>சென்னை, ஜூலை 9- சென்னை மாநகராட்சி யில் பல்வேறு திட்ட பணி களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்தை முதல் தேதியே வழங்க வேண்டும் என சென்னை பொது தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பொதுச் செயலாளர் ஆர்.லோக நாதன் மாநகராட்சி ஆணை யரை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், சென்னை மாநகராட்சியில் பல்வேறு திட்டப்பணிகளில் வேலை செய்யும் தற்காலிக பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் மிக கால தாமதமாகவே சம்ப ளம் வழங்கப்படுகிறது. முந்தைய ஆணையர் குமரகுருபரர் முதல் தேதியில் தொழி லாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என உத்தரவு வழங்கியபோதும் அதி காரிகள் இத்தனை காலம் நடைமுறைப் படுத்த வில்லை. இதனால் தொழி லாளர்கள் பெருத்த மன உளைச்சலுக்கு ஆளா கின்றனர். சம்பளம் எப்போது கிடைக்கும் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளா கின்றனர். ஆகவே தாங்கள் உரிய முறையில் தலையிட்டு அனைத்து தொழிலாளர்க ளுக்கும் ஒவ்வொரு மாத மும் முதல் தேதியே சம்பளம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பொருளாளர் கே.மனோகர், துணை செயலாளர் ஜூகைப் முஜாகிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.