தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

என்யுஎச்எம் பணியாளர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே வழங்கப்படும் சிபிஎம் தலைவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி!

16 Jun 2026, 12:17 am
என்யுஎச்எம் பணியாளர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே வழங்கப்படும்  சிபிஎம் தலைவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி!
<p><strong>என்யுஎச்எம் பணியாளர்களுக்கு பிடிக்கப்பட்ட ஊதியம் உடனே வழங்கப்படும் சிபிஎம் தலைவர்களிடம் மாநகராட்சி ஆணையர் உறுதி!</strong></p><p>சென்னை, ஜூன் 15- சென்னை மாநகராட்சி என்யுஎச்எம் திட்டத்தின்கீழ் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணி யாளர்களுக்கு, மொபைல் செயலி வருகைப் பதிவு குளறுபடிகளால் பிடிக்கப் பட்ட மே மாத ஊதியம் உடனே வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதியளித்துள்ளார். தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலை யங்கள், மக்கள் நல்வாழ்வு மையங்களில் பல ஆண்டு களாக ஒப்பந்த அடிப்படை யில் பணிபுரியும் ஊழியர்க ளின் பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம், உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, ஆர்.முரளி, இ.சர்வேசன் ஆகி யோர் அடங்கிய குழுவினர் மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். பொதுமக்களின் சுகாதார நலனைப் பாது காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இவர்களுக்கு, ஜிசிசி மொபைல் ஆப் வருகைப் பதிவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மே மாத ஊதியம் கணக்கிடப் பட்டதால், சுமார் 50 சத வீத ஊழியர்களுக்கு மட்டுமே முழு ஊதியம் கிடைத் துள்ளது பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயோமெட்ரிக் முறையை நீக்கிவிட்டு, வருகைப் பதிவை பராமரிக்கும் மாநக ராட்சியின் பொறுப்பை பணியாளர்களின் கடமை யாக்கும் புதிய முறையைக் கைவிட வேண்டும் என சிபிஎம் தலைவர்கள் வலி யுறுத்தினர். மேலும், ஊதியப் பிடித்த விவ ரங்கள் அறிய சம்பளச் சீட்டு வழங்குதல், காலிப்பணி யிடங்களை நிரந்தரமாக்கு தல், மக்கள் நல்வாழ்வு மையங்களுக்கு 24 மணி நேரப்பாது காவலர்களை நிய மித்தல் போன்ற கோரிக்கை களையும் முன்வைத்தனர். இக்கோரிக்கைகளை பரிசீலித்த மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், செயலி குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட பணியாளர்க ளுக்குப் பிடிக்கப்பட்ட ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.