தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை மாநகராட்சியின் இணக்கமற்ற போக்கு: அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டங்களில் மேயர், கவுன்சிலர்கள் பங்கேற்க மறுப்பு

20 May 2026, 1:21 am
சென்னை மாநகராட்சியின் இணக்கமற்ற போக்கு:  அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டங்களில்  மேயர், கவுன்சிலர்கள் பங்கேற்க மறுப்பு
<p><strong>சென்னை மாநகராட்சியின் இணக்கமற்ற போக்கு: அமைச்சர்கள் ஆய்வுக்கூட்டங்களில் மேயர், கவுன்சிலர்கள் பங்கேற்க மறுப்பு</strong></p><p>சென்னை, மே 19- தமிழகத்தில் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து 10 நாட்களே யான நிலையில், மாநில நிர்வாகத் திற்கும் சென்னை மாநகராட்சிக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் திங்கட்கிழமை நடை பெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அமைச் சரவை பதவியேற்பு விழாவில் முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன், சிபிஎம் கேரள மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், முன்னாள் அமைச்சர்கள் உள்பட அனைத்துக்கட்சியினரும் பங்கேற்ற னர். ஆனால் தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஒருவார கடந்த நிலையில் சென்னையை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் நடத்தும் ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் கள ஆய்வுகளில் மேயர் பிரியா, துணை மேயர், நிலைக்குழு உறுப்பினர் கள் மற்றும் கவுன்சிலர்கள் என யாரும் பங்கேற்கவில்லை.புதிய முதல மைச்சர் விஜயை பல்வேறு தரப்பின ரும் சந்தித்து வரும் சூழலில், தலைநக ரின் மேயர் இதுவரை அவரை நேரில் சந்திக்காதது ஜார்ஜ் கோட்டைக் கும் ரிப்பன் மாளிகைக்குமான ஒருங்கி ணைப்பை கேள்விக்குறியாக்கி யுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள மேயர் பிரியா, அரசு நிகழ்வுகளுக்குத் தனக்கோ அல்லது கவுன்சிலர்க ளுக்கோ எந்த அழைப்பும் வரவில்லை என்றும், காலில் ஏற்பட்ட காயம் முழு மையாகக் குணமடையாததால் முதல மைச்சரை இன்னும் சந்திக்கவில்லை என்றும் கூறியுள்ளார். துணை மேயர் மகேஷ் குமார் தான் வெளிநாட்டில் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெரும் பான்மையாக உள்ள நிலை யில், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள மாநில அரசுடன் இணக்கமாகச் செயல் பட்டால் கட்சித் தலைமை அதிருப்தி யடையுமோ என்ற தயக்கத்தில் மாநக ராட்சிப் பிரதிநிதிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மாநகராட்சியின் பெரிய திட்டங்களுக்கு மாநில அரசின் நிதியும், எம்.எல்.ஏ-க்களின் தொகுதி மேம்பாட் டுப் பணிகளுக்கு மாமன்றத்தின் ஒப்பு தலும் பரஸ்பரம் தேவைப்படும் நிலை யில், இரு தரப்புக்கும் இடையேயான இந்தப் பூசல் சென்னை நகர வளர்ச்சித் திட்டங்களைப் பாதிக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.