முந்தய பக்கம்

மணலியில் 450 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

yesterday
மணலியில் 450 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

மணலியில் 450 மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

சென்னை, நவ. 11பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 இலட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 15 மண்டலங்களிலும் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுப்பராமரிக்கப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, மணலி மண்டலத்தில் ஃபியூச்சுரா பிரதான சாலை, ஃபியூச்சுரா லேஅவுட், மணலி

சாவடி மயானபூமி ஆகிய பகுதிகளில் 450 மரக்கன்றுகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இப்பணிகளை வடக்கு வட்டார துணை ஆணையாளர் ஸ்வேதா சுமன் மரக்கன்றுகளை நட்டுத் தொடங்கி

வைத்தார். மாநகராட்சி நாற்றங்கால்கள், வனத்துறை மற்றும் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தன்னார்வலர்கள் உதவியுடன் இப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Share
FacebookXWhatsAppTelegram