செல்லப் பிராணி வளர்ப்பை முறைப்படுத்த ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கியது சென்னை மாநகராட்சி
30 Nov 2025, 4:29 pm
<p><strong>செல்லப் பிராணி வளர்ப்பை முறைப்படுத்த ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கியது சென்னை மாநகராட்சி</strong></p>
<p>சென்னை, நவ.30- பெருநகர சென்னை மாந கராட்சி, செல்லப் பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்தும் விதமாக, உரிமம் வழங்கும் நடைமுறையைத் தீவிரப்ப டுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, இன்று (நவம்பர் 30) ஒரே நாளில் 7 மையங் களில் 726 செல்லப் பிராணி களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி செலுத் தப்பட்டு, மைக்ரோ சிப் பொருத்தப்பட்டதுடன், அவற்றின் உரிமையாளர் களுக்கு உரிமமும் வழங்கப் பட்டது. செல்லப் பிராணிகளுக்கு உரிமம் வழங்கும் நடை முறை, கடந்த 2023 ஆகஸ்ட் மாதம் முதல் மாநகராட்சி இணையதளம் வாயிலாகச் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. உரிமம் பெறும் நடை முறையை மேலும் எளிதாக் கவும் விரைவுபடுத்தவும், மேம்படுத்தப்பட்ட புதிய இணையதள சேவை (ஆன்லைன் போர்டல்) மேய ரால் 03.10.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. திரு.வி.க. நகர், புளியந் தோப்பு, லாயிட்ஸ் காலனி, நுங்கம்பாக்கம், கண்ணம் மாப்பேட்டை, மீனம்பாக்கம் ஆகிய செல்லப் பிராணிகள் சிகிச்சை மையங்கள் மற்றும் சோழிங்கநல்லூர் நாய் இனக் கட்டுப்பாடு மையம் என மொத்தம் 7 மையங்களில் இந்த பணிகள் நடைபெற்றன. மாநகராட்சி இணைய தளம் வாயிலாகப் பதிவு செய்யும் உரிமையாளர் களுக்கு, உரிமைப் பதிவு செய்தல், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் மைக்ரோ சிப்பிங் பொருத்துதல் ஆகிய பணி கள் ஒரே இடத்தில் வழங்கப் படுகின்றன. இதுநாள் வரை, மாநகராட்சி இணைய தளத்தில் மொத்தம் 89,691 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், அவற்றில் 43,644 செல்லப் பிராணி களுக்கு உரிமங்கள் வழங்க ப்பட்டுள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.</p>
