தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை வெயிலை சமாளிக்க மாநகராட்சி அதிரடி வழிகாட்டுதல் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

28 May 2026, 11:30 pm
சென்னை வெயிலை சமாளிக்க மாநகராட்சி அதிரடி வழிகாட்டுதல்  தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
<p><strong>சென்னை வெயிலை சமாளிக்க மாநகராட்சி அதிரடி வழிகாட்டுதல் தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?</strong></p><p>சென்னை, மே 28- தமிழகத்தில் கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில், வெப்ப அலையின் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அவசரக்கால வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து தலைவலி, தலைசுற்றல், மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தாகம் இல்லாவிட்டாலும் அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர் மற்றும் ஓ.ஆர்.எஸ் கரைசல் ஆகிய வற்றை பருக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதிய நேரத்தில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்ப்பதுடன், தளர்வான பருத்தி ஆடைகள், குடை மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும். யாரேனும் மயக்க மடைந்தால் அவர்களை நிழலில் படுக்க வைத்து குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுத்து முதலுதவி செய்ய வேண்டும்; மாறாக, மருத்துவர் ஆலோசனையின்றி பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்கக் கூடாது. தற்போது சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகள் வெப்ப நோய் சிகிச்சைக்குத் தயார் நிலையில் உள்ளதோடு, 1.34 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வெயிலின் உஷ்ணத்திலிருந்து தப்பிக்க பொதுமக்கள் மாநகராட்சியின் 57 வீடற்றோர் காப்பகங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.