ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு 10-ஆம் தேதிக்குள் ஊதியம் சென்னை மாநகராட்சி உறுதி
18 Jul 2026, 11:46 pm
<p><strong>ஒப்பந்த மருத்துவ ஊழியர்களுக்கு 10-ஆம் தேதிக்குள் ஊதியம் சென்னை மாநகராட்சி உறுதி</strong></p><p>சென்னை, ஜூலை 18- சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஒப்பந்த மருத்துவ ஊழியர்க ளுக்கு, இனி ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது. மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்குப் பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு மற்றும் நியாயமான ஊதியம் வழங்கக் கோரி, ஜூன் 15-அன்று சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரனிடம் மனு அளித்திருந்தார். இதற்குப் பதிலளித்து மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: “பொது சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள், தங்களது வருகையை மாநகராட்சி மொபைல் ஆப் (Mobile App) மற்றும் வருகைப் பதிவேடு என இரண்டு முறைகளிலும் தவறாமல் பதிவு செய்ய வேண்டும். இனி வரும் காலங்களில், இவை இரண்டையும் ஒப்பிட்டுச் சரிபார்த்து ஊதியம் வழங்கப்படும். ஒப்பந்ததாரர்களுக்கு, ஊழியர்களுக்கான ஊதியத்தை மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் வழங்கிடப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சுகாதார நிலையங்களில் நீண்டகாலமாகக் காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரம் செய்வது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது. நகர்ப்புற நல வாழ்வு மையங்களில் 24 மணி நேரமும் பாதுகாப்பு காவலர்களை நியமிப்பது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.” இவ்வாறு அந்தப் பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
