ரிப்பன் கட்டடத்தில் ஆணையர் ஆய்வு!
7 Jun 2026, 1:28 am

ரிப்பன் கட்டடத்தில் ஆணையர் ஆய்வு!

சென்னை, ஜூன் 6 - பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் ரிப்பன் கட்டட வளாகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.

அங்குள்ள 'அடிசல்' உணவகத்தின் சமையல் கூடத்தைப் பார்வையிட்ட அவர், தூய்மையைப் பராமரித்து, அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தரமான உணவு வழங்க அறிவுறுத்தினார்.

இவ்வுணவகத்தை மாநக ராட்சி பணியாளர்களுடன் சேர்த்து, சைடன்ஹாம்ஸ் சாலை வழியாகப் பொது மக்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து, பணி யாளர்கள் உணவருந்தும் கூடம், உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அங்குள்ள அடிப்படை வசதிகள் மற்றும் உபகரணங்கள் குறித்துக் கேட்டறிந்தார். பெண்களுக்குக் கூடு தல் உடற்பயிற்சி உபகரணங் களை வழங்கவும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். மேலும், அம்மா மாளிகை வாகன நிறுத்து மிடம் மற்றும் அனைத்து அலுவலகங்களையும் ஆய்வு செய்த ஆணையர், ரிப்பன் கட்டட வளாகத்தில் ரூ.74.70 கோடி மதிப்பீட் டில் கட்டப்பட்டு வரும் புதிய மன்றக் கூடத்தின் கட்டுமானப் பணி களைப் பார்வையிட்டார்.

இப்பணிகளை உரிய தொழில்நுட்ப வழிகாட்டு தலின்படி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.