தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் ரூ.56.73 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்: ஆணையாளர் ஆய்வு!

15 Jun 2026, 12:39 am
சென்னையில் ரூ.56.73 கோடியில் மழைநீர்  வடிகால் பணிகள்: ஆணையாளர் ஆய்வு!

சென்னையில் ரூ.56.73 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்: ஆணையாளர் ஆய்வு!

சென்னை, ஜூன் 14-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மழைக்கால பாதிப்பு களைத் தவிர்க்க பல்வேறு வெள்ளத் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் அண்ணா நகர், அம்பத்தூர் மற்றும் மாதவரம் ஆகிய மண்டலங்களில் ரூ.56.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை இன்று (14.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அண்ணாநகர் மண்டலம் ஜவஹர்லால் நேரு சாலை முதல் பாடி பாலம் வரை ரூ.8.85 கோடியில் நடைபெறும் பணி களையும், தாழ்வான பகுதியான அம்பத்தூர் கொரட்டூர் கிழக்கு நிழற்சாலை முதல் ஓட்டேரி நல்லா கால்வாய் வரை ரூ.25 கோடியில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்ட ஆணையாளர், இவற்றை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும், கொரட்டூர் வடக்கு நிழற்சாலை மற்றும் ஏரி உபரிநீர் கால்வாயில் ஆம்பி பியன் இயந்திரம் மூலம் நடைபெறும் தூர்வாரும் பணிகள், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ள உந்து நிலையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, மாதவரம் செங்குன்றம் பிரதான சாலை பகுதியில் மழைநீர் தடையின்றி புழல் உபரிநீர் கால்வாயில் இணையும் வகையில், ரூ.22.88 கோடி மதிப்பீட்டில் 1,450 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டு வரும் புதிய வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, அனைத்துப் பணிகளையும் தரமாகவும் விரைவாகவும் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.