தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை சென்னை மாநகராட்சி விளக்கம்

6 Jul 2026, 12:06 am
முதல்வர் படைப்பகங்கள்  தனியார் மயமாக்கப்படவில்லை  சென்னை மாநகராட்சி விளக்கம்
<p><strong>முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை சென்னை மாநகராட்சி விளக்கம்</strong></p><p>சென்னை, ஜூலை 5- பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகங்கள்’ தனியார் மயமாக்கப்பட வில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெளிவு படுத்தியுள்ளது. இது குறித்து மாநகராட்சி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மொத்தம் 24 முதல்வர் படைப்பகங் கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டன. இதில், 15 படைப்பகங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. எஞ்சிய 9 படைப் பகங்கள் கட்டும் பணி தற்போது நடை பெற்று வருகிறது. கண்காணிப்பில், மிகச் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் படைப்பகங்களின் செயல்பாடுகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், பாதுகாவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வரவேற் பாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களை நிய மிப்பதற்காக மட்டுமே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படுவதாகச் சமூக வலைதளங் களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. மாநகராட்சியின் கட்டுப்பாட்டி லேயே இவை தொடர்ந்து இயங்கும் என்பதை இதன் மூலம் உறுதிபடத் தெரி வித்துக் கொள்கிறோம் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.