அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்வு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது
29 Oct 2026, 11:32 pm

அம்மா உணவக ஊழியர்களுக்கு தினக்கூலி உயர்வு மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேறியது

சென்னை,அக்.29 -அம்மா உணவக ஊழியர்களுக்கு வழங்கப்படும் தினக்கூலி உயர்த்தப் படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் வியாழனன்று (அக்.29) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடை பெற்றது.

மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், அம்மா உணவக ஊழியர்களின் தினக்கூலியை 325 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தவும், மயிலாப்பூர் லஸ் சர்ச் சாலைக்கு எம்.சிடி.எம். சிதம்பரம் சாலை என பெயர் சூட்டவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும, 12 மண்டலங்களில் உள்ள தெரு விளக்கு மின்கம்பங்களை ஓராண்டுக்கு 5 கோடி ரூபாய் செலவிலும், 95 மாநகராட்சி விளையாட்டு திடல்களை தனியார் மூலம் 3ஆண்டுகள் பராமரிக்கவும் அனுமதி அளிப்பது உள்ளிட்ட 39 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விலைவாசி உயர்வில் முதலிடம்

முன்னதாக இந்தக்கூட்டத்தில் உரை யாற்றிய மேயர் ஆர்.பிரியா, “ரேசன் அரிசியை பாலிஷ் செய்து மீண்டும் ரேஷன் கடையிலேயே கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதல் மாநிலமாக உள்ளது.

பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது. கிலோ கணக்கில் போதைப் பொருட்களை ஆளுங்கட்சியை சார்ந்த வர்களே பதுக்கி வைத்து விற்கும் நிலை உள்ளது. சிறையிலிருந்து கைதிகள் தப்பிக்கும் நிலை தினந்தோறும் ஏதாவது ஒரு ஒன்று நடைபெற்று கொண்டு இருக்கிறது.

அரசின் நிர்வாகத்திறன் இன்மை வெளிப்பட்டு வருகிறது. எனவே. ஊரக உள்ளாட்சித் தேர்தலை குறித்து காலத்தில் நடத்துவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றார்.