தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை மாநகரம் முன்னணி!

26 Mar 2026, 2:46 pm
குடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை மாநகரம் முன்னணி!
<p><strong>குடல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னை மாநகரம் முன்னணி!&nbsp;</strong></p> <p>சென்னை, மார்ச் 26- நாட்டிலேயே &ldquo;குடல் மறுவாழ்வு மற்றும் மாற்று அறுவைசிகிச்சையில் சென்னை மாநகரம் முன்னணியில் உள்ளது. சேதமடைந்த சிறு குடலை முழுவதுமாக மாற்றியமைக்கும் அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோயால் பாதிக்கப் பட்ட குடல் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் மறு வாழ்வு சிகிச்சை ஆகிய வற்றில் சென்னை சூளை மேடு எம்ஜிஎம் மருத்துவ மனை கடந்தாண்டில் 21 அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது. இது நாட்டியே மிக அதிக மாகும் என்று குடல் மற்றும் வயிற்று உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை நிறு வனத்தின் தலைவர் டாக்டர் அனில் வைத்யா கூறினார். மருத்துவத்துறையில் செயலிழந்த குடலுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட குடல் பொருத்தப்பட்டு, உட லுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை இயற்கையாக உறிஞ்சும் திறன் நோயாளிக்குத் திரும்ப வழங்கப்படுகிறது. இது வெறும் அறுவை சிகிச்சைக்கான திட்டம் மட்டுமல்ல; அறுவை சிகிச்சை, மறுவாழ்வு, வீட்டி லிருந்தபடியே சிகிச்சை பராமரிப்பு, நோய்த் தொற்றுக் கட்டுப்பாடு மற்றும் நீண்டகால கண்காணிப்பு ஆகிய வற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான மருத்துவக் கட்டமைப்பாகும்&rdquo; என்றும் அவர் கூறினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முன்னணி மருத்துவ மனைகளுக்கு இணை யான சிகிச்சை வெற்றி விகிதத்தை இந்த மையம் கொண்டுள்ளது. இங்கு சிகிச்சை பெற்ற 98 விழுக்காடு நோயாளிகள், நேரடியாக ரத்தத்தில் ஊட்டச்சத்தைச் செலுத்தும் &lsquo;டிபிஎன் முறையிலிருந்து முழுமையாக விடுபட்டு, நோய்த்தொற்று மற்றும் கல்லீரல் பாதிப்பு அபா யங்களின்றி இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி யுள்ளனர் என்றும் டாக்டர் செந்தில் முத்துராமன் கூறினார். அறுவைசிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாத குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குடல் மாற்று அறுவை சிகிச்சையை ஒரு தீர்வாக இம்மையம் வழங்குகிறது. உலகிலேயே இது போன்ற மூன்றாவது திட்டம் இது வாகும் என்றும் அவர் தெரிவித்தார். முன்னதாக இளம் நோயாளிகள் தங்களது அனுபவங்களை செய்தி யாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.