சென்னை விரைவு செய்திகள்
1 hour before

தரமணி சாலை மயான பூமி 15 நாட்களுக்கு இயங்காது

சென்னை, நவ.20-பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கானகம், தரமணி சாலையில் உள்ள இந்து மயான பூமி நவம்பர் 19 முதல் டிசம்பர் 3-ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு இயங்காது எனப் பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடையாறு மண்டலம், வார்டு 178-க்கு உட்பட்ட இந்த மயான பூமியின் எரிவாயு தகனமேடையில் பழுது நீக்கும் பணிகள் நடைபெறுவதால், பொதுமக்கள் மாற்று ஏற்பாடாக அருகிலுள்ள வேளச்சேரி பிரதான சாலை, பாரதி நகரில் உள்ள மின் மயான பூமியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நவ.27 ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

செங்கல்பட்டு, நவ.20-செங்கல்பட்டு மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நவம்பர் மாதத்துக்கான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 27ம் தேதி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்களில் காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.3 கோடி மோசடி

செங்கல்பட்டு, நவ.20-செய்யூர் வட்டம் சூணாம்பேடு அடுத்த கயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா (40) என்பவர், மாதம் ரூ.250 தீபாவளி பண்டு மற்றும் ரூ.1 லட்சம் குலுக்கல் சீட்டுநடத்துவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த3,000-க்கும் மேற்பட்டோரி டம் சுமார் ரூ.3 கோடி வசூ லித்துள்ளார்.தீபாவளிக்குப் பொருட்களைத் தருவ தாகக் கூறிவிட்டு, எதையும் வழங்காமல் தலை மறைவான கவிதாவைக் கைது செய்து பணத்தை மீட்டுத் தரக் கோரி, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.