தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை மற்றும் செங்கல்பட்டில் இடி மின்னலுடன் கனமழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

10 May 2026, 1:34 am
சென்னை மற்றும் செங்கல்பட்டில்  இடி மின்னலுடன் கனமழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
<p><strong>சென்னை மற்றும் செங்கல்பட்டில் இடி மின்னலுடன் கனமழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி</strong></p><p>சென்னை, மே 9- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பரவலான மழை பெய்தது. மழை பெய்த முக்கிய இடங்கள் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், மீனம்பாக்கம் மற்றும் திரிசூலம் ஆகிய இடங்களில் பலத்த மழை பதிவானது. அதேபோல் நங்கநல்லூர், மேடவாக்கம், மடிப்பாக்கம், வேளச்சேரி மற்றும் பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தைப் பொறுத்தவரை வண்டலூர், மாம்பாக்கம், கண்டிகை, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், மேல்மருவத்தூர் மற்றும் மதுராந்தகம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குளிர்ச்சியான சூழல் கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெயிலின் தாக்கம், இந்தத் திடீர் மழையினால் கணிசமாகக் குறைந்துள்ளது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால், இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.