சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை
1 Nov 2026, 11:44 pm

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தெருநாய்கள் தொல்லை

சென்னை, நவ. 1-எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன், ரயில் நிலைய அவசர சிகிச்சை மையத்தில் வெறிநாய் கடி தடுப்பூசி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சனிக்கிழமை அதிகாலை லக்னோ செல்லும் ரயிலுக்காகக் காத்திருந்த பயணி ஒருவர் காபி குடிக்கவெளியே வந்தபோது முகப்பு நுழைவாயில் அருகேஅவரை தெருநாய் கடித்தது. தினமும் ஒரு லட்சத்திற்கும்அதிகமான பயணிகள் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. நடைமேடைகள் 1, 6 மற்றும் 7, காத்திருப்போர்அறைகள், கழிப்பறைகள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகள் அருகே தெருநாய்கள் பெருமளவில்காணப்படுகின்றன.

இந்த அவசர சிகிச்சை மையத்தில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் குறைந்தது 20 நாய் கடி வழக்குகள் பதிவாகியுள்ளன. சென்னை மாநகராட்சிக்கு பலமுறை புகாரளித்தும் நாய்களைப் பிடித்து கருத்தடை செய்துவிட்டு மீண்டும் அதே இடத்தில் விட்டு விடுவதால், நாய்களின்அச்சுறுத்தல் குறையவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.