தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னையில் மோடிக்கு கருப்புகொடி காட்டிய மாணவர், வாலிபர்கள் மீது தாக்குதல் - கைது

11 Oct 2026, 11:40 pm
சென்னையில் மோடிக்கு கருப்புகொடி காட்டிய மாணவர், வாலிபர்கள் மீது தாக்குதல் -  கைது

சென்னையில் மோடிக்கு கருப்புகொடி காட்டிய மாணவர், வாலிபர்கள் மீது தாக்குதல் - கைது

சென்னை, அக்.11 -

பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டிய மாணவர், வாலிபர்களை காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்தனர்.தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் சிஜேபி, இடதுசாரிகள் தீவிரம் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்தின் மீது ஒன்றியஅரசு அரசியல் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. போராட்டத் தில் ஈடுபடுகிறவர்களை சங்பரிவார் கும்பல் தாக்கி வருகிறது. இதனிடையே பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க பிரதமர் மோடி ஞாயிறன்று (அக்.11) சென்னை வந்தார்.

இந்நிலையில் 13 கோடி வாக்காளர்களை நீக்கிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும்; வாக்குத்திருட்டுக்கும், தில்லியில் நடைபெறும் தாக்குதலுக்கு காரணமான பிரதமர் மோடியே திரும்பிச் செல்க என வலியுறுத்தி கருப்புக்கொடி போராட்டம் நடத்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் அழைப்பு விடுத்தி ருந்தன.இதனையொட்டி சென்னையில் மாணவர் சங்க மாநிலத் தலைவர்

சி.மிருதுளா, மத்தியக்குழு உறுப்பினர் ச.ஆனந்த குமார், வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், பொருளாளர் தி.சந்துரு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைதாப்பேட்டை திறந்த வெளி பல்கலைக் கழகம் அருகிலிருந்து ஊர்வலமாக வந்தனர்.

கோரிக்கை அட்டை, கருப்பு கொடிகளை ஏந்தி முழக்கமிட்டு வந்தவர்களை பனகல் மளிகை அருகே காவல்துறையினர் தடுப்புகளை வைத்து தடுத்து நிறுத்தினர். இதனால் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பலவந்தமாக சாலையில் இழுத்துச் சென்று கைது செய்தனர்.

அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் மாணவர்கள் அஜெய்க்கு தலையிலும், விக்னேசுக்கு தோள்பட்டையிலும், கமலேசுக்கு கையிலும், மத்திய சென்னை வாலிபர் சங்க தலைவர் ஆண்டோவிற்கு உயிர்நாடியிலும் அடிபட்டது. இவர்களை ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக், “ஞானேஷ்குமார் பதவியில் நீடிக்க கூடாது என்று தில்லியில்தடையை மீறி போராடிய வர்களை காவல்துறை கொடூரமாக தாக்கி கைது செய்கிறது.

இதற்கு காரணமான மோடியின் சென்னை வருகையை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் கருப்பு கொடி போராட்டம் நடத்துகிறோம்.

இந்த அறைகூவலை ஏற்று முதலமைச்சர் ஜோசப்விஜய், கருப்புச்சட்டை அணிந்து சென்றுபிரதமரை வரவேற்றுள்ள தற்கு நன்றி. அதேநேரத்தில் எஸ்ஐஆர் குறித்து முதலமைச்சர் பேச வேண்டும். அரசியல் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையான வாக்குரிமை பறிப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. இதற்கெதிரான போராட்டம் தொடரும்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.