சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் அடுத்த கட்டத் திட்டப் பணிகள் தயார்!
15 Jul 2026, 9:54 pm
<p><strong>சென்னை - பெங்களூரு புல்லட் ரயில் அடுத்த கட்டத் திட்டப் பணிகள் தயார்!</strong></p><p>சென்னை, ஜூலை 15 - சென்னை முதல் பெங்களூரு வரையி லான அதிவேக புல்லட் ரயில் திட்டப்பணி கள் அடுத்த முக்கிய கட்டத்தை எட்டி யுள்ளன. இத்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைப் புதுப்பிக்கவும், புதிய பொறியியல் மற்றும் நில அளவை ஆய்வு களை மேற்கொள்ளவும் தேசிய அதிவேக ரயில் கழகம் புதிய டெண்டரைக் கோரி யுள்ளது. சென்னையில் அமையவுள்ள புல்லட் ரயில் நிலையத்தை, எம்.ஜி.ஆர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் முற்றிலும் தரைக்கடியில் அமைக்கத் திட்ட மிடப்பட்டு உள்ளதுடன், சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் நேரடியாக இணைக்கப் படும். மொத்தம் 306.2 கி.மீ நீளம்கொண்ட இவ்வழித்தடம் தமிழ்நாட்டில் சென்னை, பூந்தமல்லி, பரந்தூர்; ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர், பங்காரூபாளையம்; கர்நாடகாவில் கோலார், மாலூர், ஒயிட் பீல்டு வழியாக பெங்களூரு வரை செல்லும். பசுமை வழி விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிட்டபோதிலும், புல்லட் ரயில் திட்டத்தில் பரந்தூர் நிலையம் தொடர்ந்து தக்கவைக்கப்பட்டு, உயர்மட்ட நிலையமாக அமைக்கப்பட உள்ளது. புதிய டெண்டரின்படி, டிரோன் மற்றும் லிடார் தொழில்நுட்ப ஆய்வுகள், புவியியல் ஆய்வுகள், சுரங்கப்பாதை ஆய்வுகள் உள்ளிட்ட அனைத்துப் பொறியியல் பணி களையும் தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசகர் நிறுவனம் 150 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். கூவம், கொசஸ்தலையாறு, பொன்னை, பகுடா, பாலாறு உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மீது பாலங்கள் அமைக்கப்பட உள்ளதால், அவற்றின் வெள்ளநீர் அளவு உள்ளிட்ட அம்சங்களும் விரிவாக ஆய்வு செய்யப் படும். திட்டம் நிறைவடையும்போது சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் வெறும் 1 மணி நேரம் 13 நிமிடங்களாகக் குறை யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
