நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்கள்
3 hours before
<p>நீட் தேர்வுக்கு எதிராக போராடும் மாணவர்கள், இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், போராட்டத்திற்கு ஆதரவாகவும் சனிக்கிழமையன்று (ஜூலை 25) சென்னை சாஸ்திரி பவன் முன்பு ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ஆர்.கபாலி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை போக்குவரத்து சம்மேளன மாநில பொதுச்செயலாளர் வி.குப்புசாமி, ஆட்டோ சங்க சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.கே.முருகேஷ், சாலைப் போக்குவரத்து மாவட்டச் செயலாளர் எம்.உதயகுமார் உள்ளிட்டோர் பேசினர். </p>
