தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

13 Jul 2026, 1:05 am
சென்னை விரைவு செய்திகள்

திருநாவலூர் அருகே பூச்சி கடியால் குழந்தை உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை, ஜூலை 12- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த திருநாவலூர் அருகே விஷப்பூச்சி கடித்ததில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநாவலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈஸ்வர கண்டநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி தேவா என்பவரது இரண்டரை வயது மகன் ஹர்சித் . கடந்த சனிக்கிழமை இரவு, சிறுவன் தனது தாயுடன் தனது பாட்டி வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை ஏதோ ஒரு விஷப்பூச்சி கடித்ததாகக் கூறப்படுகிறது. வலி தாங்க முடியாமல் குழந்தை அலறியதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஹர்சித் உயிரிழந்தான். இந்தச் சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடலூரில் மின் பியூஸ் கேரியர்கள் தொடர் திருட்டு

கடலூர், ஜூலை 12- கடலூர் புதுப்பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் அருகேயுள்ள முத்துக்குமரன் தெருவில் மின் பியூஸ் கேரியர்கள் தொடர் திருட்டுக்கு உள்ளாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி அளவில் மின்தடை ஏற்பட்டது. வழக்கமான மின்வெட்டு என கருதிய பொதுமக்கள் அதைக் கவனிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை மின் கேரியர்களைப் பார்த்தபோது, அவற்றில் பொருத்தப்பட்டிருந்த பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, தற்காலிகமாக பியூஸ் கேரியர்களுக்குப் பதிலாக மின் கம்பி மூலம் இணைப்பு வழங்கி மின் விநியோகத்தைச் சீரமைத்தனர். தொடர்ச்சியாக நடைபெறும் மின் உபகரண திருட்டுகளைத் தடுக்க காவல்துறையும், மின்வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

விழுப்புரம், ஜூலை 12- விழுப்புரம் ஜானகிபுரம் மேம்பாலம் அருகே போலீஸார் நடத்திய வாகன சோதனையில், பெங்களூரிலிருந்து பாண்டிச்சேரிக்கு காரில் கடத்தி வரப்பட்ட 230 கிலோ குட்கா பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.2.30 லட்சம் ஆகும். இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஷேஷாராம் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த பரத் (36) ஆகிய இருவரைக் கைது செய்த போலீஸார், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல்

ராணிப்பேட்டையில் மீட்கப்பட்ட 103 செல்போன்கள்

ராணிப்பேட்டை, ஜூலை 12- ராணிப்பேட்டை மாவட்டத்தில் காணாமல் போன ரூ. 13.82 லட்சம் மதிப்பிலான 103 செல்போன்களை மீட்ட காவல்துறையினர், அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் உரிமையாளர்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனர். கடந்த இரு மாதங்களில் மட்டும் மொத்தம் ரூ. 26.40 லட்சம் மதிப்புள்ள 210 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. செல்போன்களைத் தொலைப்பவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதோடு, ஒன்றிய அரசின் சி.ஈ.ஐ.ஆர் இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் தொலைந்த போன்களை முடக்கவும், எளிதில் கண்டறியவும் முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

சென்னை, ஜூலை 12- கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்க முயன்ற அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த பார்த்திபன் (24), வல்லாஞ் சேரியைச் சேர்ந்த சந்தோஷ் (23) ஆகிய இரு வரைப் போலீசார் கைது செய்தனர்.சந்தே கத்திற்கிடமாக நின்றிருந்த இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த உதவி ஆய்வாளர் அங்கு ராஜ், இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

பெரம்பூர் தொகுதியில் ரூ. 48 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகளுக்கு டெண்டர்

சென்னை, ஜூலை 12- முதலமைச்சர் தொகுதி யான பெரம்பூரில், ஒருங்கி ணைந்த பகுதி மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியுள்ளது. சென்னை வியாசர்பாடி, எம்.கே.பி. நகர் மற்றும் கொடுங்கையூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இத்திட்டத்தின் கீழ், 20 கி.மீ தொலைவிலான சாலை களில் வாகன நிறுத்தம், நடை பாதைகள், பூங்காக்கள், குடிநீர் மற்றும் வெள்ளத் தடுப்பு வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளன. 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட உள்ள இந்த அறிக்கையின் மூலம், நகர்ப்புறச் சிக்கல்களுக்கு ஒரே நேரத்தில் நிரந்தரத் தீர்வுகள் காணப்பட வுள்ளன.

குப்பைகளைத் தரம் பிரித்து வழங்க மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை, ஜூலை 12- பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் படி குப்பை களை அந்தந்த இடத்திலேயே தரம் பிரித்து வழங்க வேண்டும் என நிர்வாகம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி, மக்கும் கழிவுகளைப் பச்சை நிறத் தொட்டி யிலும், மக்காத கழிவுகளை நீல நிறத் தொட்டியிலும், சுகாதாரக் கழிவுகளைச் சிவப்பு நிறத் தொட்டியிலும், பேட்டரி போன்ற அபாயகரக் கழிவுகளைக் கருப்பு நிறத் தொட்டியிலும் தனித்தனியாக வழங்க வேண்டும். மாநகராட்சியின் அனைத்துக் குப்பை சேகரிப்பு வாகனங்களிலும் இதற்கென தனித்தனிப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்களுக்குச் சட்டப்படியான அபராதம்

விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. பள்ளி இடைநின்ற 6 குழந்தைகளை ‘சிங்கப்பெண்’ மீட்பு

ராணிப்பேட்டை, ஜூலை 12- ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரு கிறது. இதன் ஒரு பகுதியாக, ஆற்காடு வேப்பூர் பகுதி யில் ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை உதவியாளர் ரேவதி தலைமையிலான காவல்துறையினர் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அப்போது பல்வேறு காரணங்களால் பாதியிலேயே படிப்பை நிறுத்திய 6 குழந்தைகளைக் கண்டறிந்த காவல்துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் உதவியுடன் பெற்றோருக்குக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனைகளை வழங்கினர். தொடர்ந்து, அந்த 6 குழந்தைகளும் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 31 குழந்தைகள் மீட்கப்பட்டு மீண்டும் கல்வி பயின்று வருகின்றனர். காவல்துறையினரின் இந்தச் சமூகப் பொறுப்பிற்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

உளுந்தூர்பேட்டையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் நேரில் ஆய்வு

உளுந்தூர்பேட்டை, ஜூலை 12- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் பிடாகம் ஊராட்சியில் 'விக்சித் பாரத் - கிராமப்புற வேலைவாய்ப்பு' திட்டத்தின் கீழ் ரூ.6.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட வட்டார நாற்றுப் பண்ணை மற்றும் ரூ.2.16 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மரக்கன்று நடும் பணிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து, உளுந்தூர்பேட்டையில் ரூ.21.086 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் மற்றும் ரூ.16.85 கோடி மதிப்பிலான புதிய பேருந்து நிலையப் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். மேலும், ரூ.30.25 கோடி மதிப்பிலான குடிநீர் குழாய் அமைக்கும் பணி மற்றும் ரூ.6.95 கோடி மதிப்பிலான பாதாள சாக்கடை இணைப்புப் பணிகளையும் ஆய்வு செய்தார். புதிய பேருந்து நிலையத்தின் அடித்தளப் பணிகள் முடிவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.