முந்தய பக்கம்

சென்னை அமிர்தா - மலேசியா யுனிகாம் இடையே ஒப்பந்தம்

9 Apr 2026, 5:30 am
சென்னை அமிர்தா - மலேசியா யுனிகாம் இடையே ஒப்பந்தம்

சென்னை அமிர்தா - மலேசியா யுனிகாம் இடையே ஒப்பந்தம்

சென்னை, ஏப்.8- தகுதியார்ந்த மாணவர்களை விமான நிறுவன வழியிலான மற்றும் விமானத்திற்குள் பணிபுரிய சர்வதேச தரமிக்க பயிற்சி அளிக்க சென்னையில் உள்ள சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் ஏவியேஷன் கல்லூரி, மலேசியாவின் யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் ஏவியேஷன் (யுனிகாம்) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

மாணவர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான நேரடிப் பயிற்சியை வழங்குவதே இதன் நோக்கம். இதன்படி, மாணவர்கள் இந்தியாவிலும் மலேசியாவில் தங்கி, ஆறு மாதக் கல்விப் பயிற்சியும், ஆறு மாத விமான நிலைய உள்ளகப் பயிற்சியும் பெறுவர்.

படித்து முடித்த பின்னர் வளாக நேர் காணல் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வேலைவாய்ப்பிற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று சென்னை அமிர்தா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூமிநாதன் கூறினார்.

தற்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 6 முதல் 9 வரை சென்னையில் சர்வதேச விமானப் போக்குவரத்துப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. 2035-க்குள் இத்துறையில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் தேவைப்படுவார்கள் எனத் தெரிவித்த பூமிநாதன், நிலையில் விரைவில் புதிய கிளை தொடங்கப்படும் என்றார்.

இக்கல்லூரி மாணவர்களுக்குப் பல லட்சம் மதிப்புள்ள சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கப் பயிற்சியை அமிர்தா கல்லூரி முற்றிலும் இலவசமாக வழங்குகிறது என்றும் அவர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram