சென்னை விமான நிலைய 3ஆவது முனைய பணி இரண்டு ஒப்பந்ததாரர்கள் விலகல் இதுவரை 40 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவு
18 May 2026, 10:57 pm

சென்னை விமான நிலைய 3ஆவது முனைய பணி இரண்டு ஒப்பந்ததாரர்கள் விலகல் இதுவரை 40 சதவீதப் பணிகள் மட்டுமே நிறைவு

சென்னை, மே 18 - பல்வேறு தாமதங்களைச் சந்தித்த சென்னை விமான நிலைய நவீனமய மாக்கல் திட்டத்தின் புதிய காலக்கெடு வரும் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நிதி நெருக்கடி காரணமாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் திட்டத்திலிருந்து விலகிய போதிலும், பணிகள் திட்ட மிட்டபடி நடந்து வருவதாக இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த முனையப் பணிகளுக்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, விரை வில் புதிய ஒப்பந்தங்கள் வழங்கப் படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சென்னை விமான நிலையத்தின் சர்வதேச 3ஆவது முனைய கட்டுமானத் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலை யில், இந்த முனையத்தின் உட்புறப் பணிகளை மேற்கொண்டு வந்த இரண்டு ஒப்பந்ததாரர்கள் திட்டத்திலிருந்து தற்போது விலகியுள்ளனர்.

இதுவரை இந்த முனையத்தின் கட்டுமானப் பணிகள் சுமார் 40 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளதால், இதன் காலக்கெடு தற்போது டிசம்பர் 2026 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச விமானச் சேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ள இந்த ஒருங்கி ணைந்த முனையக் கட்டிடம், இரண் டாம் கட்ட நவீனமயமாக்கல் திட்டத் தின் மிக முக்கியமான பகுதியாகும்.

இரண்டு லட்சத்து இருபதாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்திரண்டு சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இத்திட்டம், இரண்டு கட்டங்களாக சுமார் 2467 கோடி ரூபாய் மதிப்பில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப் பட்டது.

பெருந்தொற்று மற்றும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட முடக்கத் திற்குப் பிறகு, இந்த ஒருங்கிணைந்த கட்டிடத்தின் முதல் கட்டமான 2ஆவது சர்வதேச முனையம் 2023ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டு, விமானச் சேவைகளும் தொடங்கப்பட்டன.

அதற்கு அடுத்த ஆண்டு, 3ஆவது சர்வதேச முனையத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் தொடங்கப்பட்ட போதிலும், அவை இன்னும் முழுமை யடையவில்லை.

மாநிலங்களவையில் தெரிவிக்கப் பட்டிருந்தபடி, இந்த இரண்டாம் கட்டத் திட்டத்தின் அசல் நிறைவுத் தேதி 2022ஆம் ஆண்டாக இருந்தது.

ஆனால், தொடர் முட்டுக்கட்டைகள் மற்றும் அடுத்தடுத்த தாமதங்களுக்குப் பிறகு, தற்போது இறுதி காலக்கெடு டிசம்பர் 2026 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகள் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருப்ப தாகவும், ஒவ்வொரு வாரமும் திட்டத் தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்திய விமான நிலையங்கள் ஆணைய அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இனிமேல் எந்தத் தாமதமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்றும், கட்டு மானத்தின் மிகக் கடினமான பகுதி முடிந்துவிட்டதால் இனி எந்தப் பிரச்ச னையும் வராது என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அதிகாரி ஒருவர் கூறு கையில், பணிகள் தற்போது வேகம் எடுத்துள்ளதால் டிசம்பர் மாத காலக் கெடுவுக்குள் கண்டிப்பாக முடிந்து விடும் என்றார்.

முனையத்தின் உட்புறப் பணிகளைச் செய்வதற்கான ஒப்பந்தங் களைப் பெற்றிருந்த இரண்டு நிறு வனங்கள் சில காலத்திற்கு முன்பு திட்ட த்திலிருந்து விலகியதை ஒப்புக் கொண்ட அவர், அந்தப் பணிகளுக்காக ஏற்கெனவே புதிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதிய ஒப்பந்தம் வழங்கப்படும் என்ப தால் இது திட்டத்தைப் பாதிக்காது என்றும் விளக்கினார்.

பலமுறை ஏற்பட்ட தாமதங்களால், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்து வது தங்களுக்குப் பொருளாதார ரீதி யாகச் சாத்தியமில்லை என்று கருதியே அந்த இரண்டு ஒப்பந்ததாரர்களும் விலகியதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் இந்த ஒப்பந்தத்தைப் பெற்ற போது இருந்த விலைகளுக்கும், தற்போதைய விலை உயர்வு மற்றும் தாமதங்களுக்கும் இடையே அவர்க ளால் சமாளிக்க முடியாமல் போனதே இதற்குக் காரணம் என்று கூறப்படு கிறது.

இருப்பினும், இந்த இரண்டு ஒப்பந்த தாரர்களின் விலகலும் 3ஆவது முனையக் கட்டுமானத்தில் சிறிய தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சொல்லப் படுகிறது.

அவர்கள் தொடர்ந்து இருந்தி ருந்தால், தற்போதைய கட்டுமானப் பணிகளோடு சேர்த்தே உட்புறப் பணி களின் ஒரு பகுதியையும் இப்போது தொடங்கியிருக்க முடியும் என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.