சென்னை விமான நிலையத்தில் இதய பாதிப்புகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க புதிய முயற்சி
6 Aug 2026, 12:28 am

சென்னை விமான நிலையத்தில் இதய பாதிப்புகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க புதிய முயற்சி

சென்னை, ஆக. 5-சென்னை பன்னாட்டு விமான நிலை யத்தில் திடீர் மாரடைப்பு போன்ற அவசர இதய பாதிப்புகளுக்கு விரைந்துசிகிச்சையளிக்க, காவேரி மருத்துவ மனை யும் விமான நிலைய நிர்வாகமும் இணைந்து ‘ஹார்ட்சேஃப்’திட்டத்தைத் தொடங்கியுள்ளன.

சென்னை விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், காவேரி மருத்துவ மனை குழும நிறுவனர் மற்றும் நிர்வாகஇயக்கு நர் டாக்டர் மணிவண்ணன் செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.இதில் மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர்.இதன்கீழ் விமான நிலையம் முழுவதும் 13 தானியங்கி வெளிப்புற உதறல் கருவி கள் நிறு வப்பட்டுள்ளன. விமானநிலைய இயக்குநர் ராஜா கிஷோர் மற்றும் காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் மணி வண்ணன் செல்வராஜ்முன்னி லையில் இத்திட்டம் தொடங்கப் பட்டது.

சென்னை விமான நிலையத்தின் முதலாவது இரண்டாவது நான்காவது முனையங்களில் 49 மருத்துவப்பணியாளர்க ளுடன் 24 மணி நேரமும்செயல்படும் அவசர மருத்துவ மையங்களை யும், 2 ஆம்புலன்ஸ்களையும் காவேரி மருத்துவமனை இயக்கிவருகிறது. இம்மையங்கள் மாதம்320 முதல் 400 நோயாளிகளுக்குச் சிகிச்சைய ளிக்கின்றன. இதில் 5 முதல் 10 பேர் இதய பாதிப்பு களுக்காக வருகின்றனர்.

மாரடைப்பு ஏற்படும் போது முதல் சில நிமிடங்க ளில் வழங்கப்படும் சிபி ஆர் மற்றும் ஏ.இ.டி சிகிச்சை உயிர்பிழைக்கும் வாய்ப்பைக் கணிசமாக உயர்த்துகிறது. இக்க]ருவிகள் மூலம் விமான நிலைய பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குப் பாது காப்பான சூழல் உறுதி செய்யப்படுகிறது.