வெளிநாட்டு கரன்சி கடத்தல் முயற்சி முறியடிப்பு: 2 பேர் கைது
18 Aug 2026, 10:58 pm

வெளிநாட்டு கரன்சி கடத்தல் முயற்சி முறியடிப்பு: 2 பேர் கைது

சென்னை, ஆக. 18 – பஹ்ரைனுக்குக் கடத்த முயன்ற 17.65 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களைச் சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரைச் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில்முகாமிட்டிருந்த அதிகாரிகள், கல்ப்ஏர்விமானம் மூலம் பஹ்ரைன் செல்லவிருந்த இருவரை சோதனையிட்டனர்.

அவர்களின் உடமைகளைச் சோதித்தபோது, துணிகளுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 18,000 அமெரிக்கடாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.17.65லட்சம்) இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

பயணிகளிடம் உரிய ஆவணங்கள்எதுவும் இல்லாததால், மேற்கொண்டுவிசாரணை நடத்துவதற்காக அந்தஇருவரும் சென்னை சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பணத்தைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.