தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

14 Jun 2026, 1:06 am
சென்னை விரைவு செய்திகள்

செய்யூர் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் கட்டக் கலந்தாய்வு

செய்யூர், ஜூன் 13- செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூன் 16, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளதாக கல்லூரி முதல்வர் மாதவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.ஏ. வரலாறு மற்றும் பி.ஏ. அரசியல் அறிவியல் ஆகிய ஐந்து துறைகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தினசரி காலை 9 மணிக்குத் தொடங்கும் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்குத் தர மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும். இதுவே நிறைவு கட்டக் கலந்தாய்வாக நடைபெறுவதால், விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் சேர்க்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.

பரந்தூர் பசுமை விமான நிலையம் குறித்து ஒன்றிய மாநில அரசுகள் முடிவெடுக்கவேண்டும் சென்னை விமான நிலைய இயக்குனர் பேட்டி

சென்னை, ஜூன் 13- சென்னை விமான நிலையத்தில் ஜூன் 15 அன்று ‘பயணிகள் வசதி தினம்’ கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த விமான நிலைய இயக்குனர் ராஜா கிஷோர், விமான நிலையத்தின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கமளித்தார். சென்னை விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த மூன்றாவது முனையத்தின் பணிகள் டிசம்பர் இறுதிக்குள் நிறைவடையும்; தற்போது 42 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளன. முதலாம் முனையத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள பிளாசா, ஜூலை மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வரும். மேலும், சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தை உள்ளடக்கிய அதிநவீன ‘ஸ்டார்டிலைட்’ முனையமாக ஐந்தாவது முனையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளுக்காக ரோபோ வகை நவீன டிராலிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மழைக்கால வெள்ளப் பாதிப்புகளைத் தவிர்க்க, அடையாறு ஆற்றுடன் இணைக்கும் வகையில் பிரம்மாண்ட மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் 60 விழுக்காடு நிறைவடைந்துள்ளன. விமான நிலையத்திற்குள் நிலவும் நாய் தொல்லைகளைக் கட்டுப்படுத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பரந்தூர் விமான நிலையம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைப்பது குறித்த முடிவை, தமிழக அரசும் ஒன்றிய அரசும் கலந்து ஆலோசித்து எடுக்கும் என்று இயக்குனர் தெரிவித்தார். இதில் இந்திய விமான நிலைய ஆணையம் தலையிடாது என்று அவர் குறிப்பிட்டார். பரந்தூர் திட்டம் குறித்து மாநில அரசுடன் பேசுவதற்கு உயர்மட்டக் குழு வரவுள்ளது குறித்த தகவல் தங்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை என்றும் ராஜா கிஷோர் கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.