தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிகமான விஐபி வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு உரிய நேரத்தில் அனுமதி கிடைப்பதில்லை! முதல்வரின் புகாருக்கு விமான நிலைய ஆணையம் விளக்கம்

24 Sept 2026, 9:40 pm
அதிகமான விஐபி வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு உரிய நேரத்தில் அனுமதி கிடைப்பதில்லை! முதல்வரின் புகாருக்கு விமான நிலைய  ஆணையம் விளக்கம்

அதிகமான விஐபி வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி விரிவாக்கத் திட்டப் பணிகளுக்கு உரிய நேரத்தில் அனுமதி கிடைப்பதில்லை! முதல்வரின் புகாருக்கு விமான நிலைய ஆணையம் விளக்கம்

சென்னை, செப். 24 -சென்னை விமான நிலைய தனியார்மயம் தொடர்பாக, பிரதமர் மோடிக்கு,முதல்வர் ச. ஜோசப் விஜய் எழுதிய கடிதத்திற்கு விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை, வேறு நிறுவனத்திடம் ஒப்படைக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்,கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பக்கங்கள்கொண்ட கடிதத்தை எழுதியிருந்தார். முதல்வரின் புகார் தொடர்பாக விளக்கமளிக்குமாறு, இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு (AAI), மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், கடந்த செப்டம்பர் 10 அன்று உத்தரவிட்டி ருந்தது.

இந்நிலையில், விமானநிலையங்கள் ஆணையம், ஒன்றிய அரசுக்கு தனது விளக்கத்தை அளித்துள்ளது. தமிழ்நாட்டில், விமான இயக்க நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விமான முனையங்களில் அதிகளவில் வரும் விஐபி வாகனங்களால் ஏற்படும் பிரச்சனைகளும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் பிரச்சனைகள் காரணமாக சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த 2025 மற்றும் 2026 ஆம் நிதி ஆண்டுகளில் பயணிகளின் போக்குவரத்து 2.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் விளக்கக் கடிதத்தில் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும்,

சரக்குகளைக் கையாளும் திறன் அதிகரித்துள்ளதாகவும், சுமார் 15,500 மெட்ரிக் டன் அளவிலான ஆப்பிள் ஐபோன்கள் சென்னை விமான நிலையம்மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.விமான நிலையத்தின் பல்வேறு விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட திட்டங்களுக்குத் தேவையான உரிய அனுமதிகள் தகுந்த நேரத்தில் கிடைக்கவில்லை என்று அந்தத் கடிதத்தில் இந்திய விமான நிலைய ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மாநில அளவிலான கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், அதற்கான அனுமதிகள் தேங்கிய நிலையில் உள்ளதாகவும் விமானநிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், விமான எரிபொருளுக்கு விதிக்கப்படும் 29 சதவிகிதம் வாட் (VAT) வரி அதிகமாக இருப்பதால், விமானச்சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.