தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எவரெஸ்ட் சிகரத்தை வென்று சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி சாதனை

3 Jun 2026, 12:42 am
எவரெஸ்ட் சிகரத்தை வென்று  சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி சாதனை
<p><strong>எவரெஸ்ட் சிகரத்தை வென்று சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி சாதனை</strong></p><p>சென்னை, ஜூன் 2- சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுமி நிஷா சசிகுமார், கடந்த மே 25 அன்று உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் (8,848 மீட்டர்) உச்சியை அடைந்து, மிக இள வயதில் இச்சாதனையைப் படைத்தவர்களில் ஒருவராக முத்திரை பதித்துள்ளார். தனது 14 வயது முதலே உடற் பயிற்சி, பாறை ஏறுதல், மிதிவண்டி ஓட்டுதல் மற்றும் ஓட்டப்பயிற்சி என இதற்காக அவர் தீவிரமாகத் தயாராகி வந்தார். இந்த மலையேற்றத்தின் போது உடல்நிலையை விட மனவலி மையே முக்கியம் என்று நிஷா குறிப் பிட்டுள்ளார். இப்பயணத்தில் நிஷா பல்வேறு உணர்வுப்பூர்வமான சவால்களை எதிர்கொண்டார். உடன் மலையேறிய அவரது தந்தை சசிகுமார், 7,000 மீட்டர் உயரத்தில் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்கப்பட்டார். இதனால் முகாம் 3-க்கு பிறகு மலையேற்றத் தைக் கைவிட்டு கீழே இறங்க நினைத்த நிஷாவிற்கு, சக மலையேற்ற வீரர் ஒருவர் அளித்த ஊக்கமே தொடர்ந்து முன்னேறக் காரணமாக இருந்தது. மேலும், வழியில் பலரது உடல் களைக் கடந்து சென்றதே தனக்கு நேர்ந்த மிகப்பெரிய சவால் என்றும் அவர் உருக்கமுடன் பகிர்ந்துள்ளார். நிஷா சிகரத்தை அடைந்து சாதனை படைத்த செய்தியைக் கேட்கும்போது, அவரது தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்தார். மகளின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடாமல், அவர் நினைத்ததைச் சாதிக்கட்டும் என்று நிஷாவின் தாய் அருணா சசிகுமார் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மகளின் ஆர்வத்தால் ஈர்க்கப்பட்டு தற்போது அவரது தாயும் மலை யேற்றப் பயிற்சிகளைத் தொடங்கி யுள்ளார். வரும் நவம்பர் மாதம் தங்களது குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ஒரு மலையேற்றப் பயணத்திற்குத் திட்டமிட்டுள்ள தாகவும் அவர் கூறினார். அலாஸ்காவின் டெனாலி மற்றும் அண்டார்டிகாவின் வின்சன் சிகரங்களை வெல்வதே தனது அடுத்த இலக்கு என்று நிஷா தெரிவித்துள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.