தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செங்கம் அருகே பணியின் போது மின்வாரிய ஊழியர் சாவு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்

17 May 2026, 11:55 pm
செங்கம் அருகே பணியின் போது மின்வாரிய ஊழியர் சாவு நீதி கேட்டு  உறவினர்கள் சாலை மறியல்
<p><strong>செங்கம் அருகே பணியின் போது மின்வாரிய ஊழியர் சாவு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல்</strong></p><p>செங்கம்,மே 17- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பணியின் போது ஏற்பட்ட விபத்தில் தற்காலிக மின்வாரிய ஊழியர் ஒருவர் உயிரி ழந்தார். அவரது மரணத்திற்கு நீதி கேட்டு, உயிரிழந்தவரின் உடலைச் சாலையில் வைத்து உறவினர்கள் கண்டன போராட் டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கம் மின்வாரிய அலுவலகத் திலிருந்து மின் கம்பங்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டர் ஒன்று எதிர்பாராத விதமாகத் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில், அங்கு தற்காலி கப் பணியாளராக வேலை செய்து வந்த அசோக்குமார் என்பவர் சனிக்கிழமை பரிதாப மாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு செய்யப் பட்டது. ஞாயிறன்று பிற்பகல் அசோக்குமா ரின் உடல் அவரது உறவினர்களிடம் முறைப் படி ஒப்படைக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து உடலைப் பெற்றுக்கொண்டு வந்த அவரது கர்ப்பிணி மனைவி மற்றும் உறவினர்கள், செங்கம் அம்பேத்கர் சிலையின் முன்பு திண்டி வனம் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை யில் உடலை நடுரோட்டில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். பணியின் போது விபத்தில் உயிரிழந்த தற்காலிக ஊழியரின் மரணத்திற்கு மின்வாரியமே முழுப் பொறுப் பேற்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தேசிய நெடுஞ்சாலையில் பிணவறை யிலிருந்து கொண்டு வரப்பட்ட உடலை வைத்துப் போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட வர்களுடன் சமரச பேச்சு நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து, உற வினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். அதன் பின்னர் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.