முந்தய பக்கம்

கிராம ஊராட்சிகளின் குப்பைகளை அரசு கிடங்கிற்கு அனுப்பும் பணி துவக்கம்

3 Jun 2026, 12:32 am
கிராம ஊராட்சிகளின் குப்பைகளை அரசு கிடங்கிற்கு அனுப்பும் பணி துவக்கம்
<p><strong>கிராம ஊராட்சிகளின் குப்பைகளை அரசு கிடங்கிற்கு அனுப்பும் பணி துவக்கம்</strong></p><p> திருக்கழுக்குன்றம், ஜூன் 2- செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் நெய்குப்பி ஊராட்சியில் வீடுகள் மற்றும் பஜார் வீதி கடைகளில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சேகரிக் கப்படும் குப்பைகள், நரசங்குப்பம் கிராமப் பகுதியில் தற்காலி கமாகக் குவித்து வைக்கப்பட்டு வந்தன. இடநெருக்கடி காரணமாக, இந்த குப்பைகள் அனைத் தையும் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், கொளத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு குப்பை சேமிப்பு கிடங்கிற்கு அனுப்ப வட்டார வளர்ச்சி நிர்வாகம் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து, நெய்குப்பி ஊராட்சி மன்றத் தலைவர் அர்ஜுனன் மற்றும் துணைத் தலைவர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில், நரசங்குப்பத்தில் தேங்கியி ருந்த குப்பைகள் லாரிகள் மூலம் கொளத்தூர் கிடங்கிற்கு அனுப்பும் பணிகள் தொடங்கப்பட்டன. மேலும், திருக்க ழுக்குன்றம் ஒன்றியத்தில் குப்பை சேகரிக்க போதிய இட மில்லாத இதர சில ஊராட்சிகளில் இருந்தும், கொளத்தூர் கிடங்குக்கே குப்பைகளை அனுப்ப அறிவுறுத்தப்பட் டுள்ளதாகத் தெரிகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram