சென்னை விரைவு செய்திகள்
30 minutes before

ரயில் மோதி மாணவி உயிரிழப்பு

செங்கல்பட்டு, நவ. 21-சிங்கபெருமாள் கோவில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது புறநகர் மின்சார ரயில் மோதியதில் பள்ளி மாணவி உயிரிழந்தார்.

மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த குமாரின் மகள் யுவஸ்ரீ (16), மறைமலைநகரில் உள்ள தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை (நவ. 20) மாலை சிங்கபெருமாள் கோவில் - திருத்தேரி ரயில்வே கேட் இடையே தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் இவர் மீது மோதியது. படுகாயமடைந்த யுவஸ்ரீ செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேல்மருவத்தூரில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மின்னஞ்சல் பிரச்சாரம்

செங்கல்பட்டு, நவ.21-மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகள் சார்பில் ரயில்வே அலுவலர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல்மருவத்தூர், செய்யூர், சித்தாமூர், லத்தூர், மதுராந்தகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பக்தர்கள் பயனடையும் வகையில், 2027 ஜனவரியில் வெளியாகும் புதிய ரயில்வே கால அட்டவணையில் கூடுதல் ரயில் நிறுத்தங்களை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற உழவன், கம்பன், சேலம், சிலம்பு ஆகிய ரயில்களுடன், வைகை, பாண்டியன், கொல்லம், மலைக்கோட்டை, பொதிகை, மன்னை, செங்கோட்டை, கன்னியாகுமரி, அந்த்யோதயா, அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் உள்ளிட்ட விரைவு ரயில்களுக்கும் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இக்கோரிக்கையை வலியுறுத்தி சிபிஎம் செய்யூர் வட்டக்குழு, வாலிபர் சங்கம், மாதர் சங்கம், மாணவர் சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து இம்மின்னஞ்சல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலாறு மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு, நவ. 21-வார விடுமுறையையொட்டி சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கி அதிக அளவில் வாகனங்கள் செல்வதால், செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, இருகுன்றம்பள்ளி – மாமண்டூர் இடையே அமைந்துள்ள சுமார் 50 ஆண்டுகள் பழமையான பாலாற்று மேம்பாலம் குண்டும் குழியுமாகக் காட்சியளிப்பதால், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்ந்து செல்கின்றன. ஒரே நேரத்தில் அதிகப்படியான வாகனங்கள் கடந்து செல்வதால் வேகமாகச் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும், சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபடாததால், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது.

புகார் மனுவை விசாரிக்காமல் அலைகழித்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்!

செங்கல்பட்டு, நவ. 21-புகார் மனு அளித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இரு தரப்பையும் அழைத்து விசாரிக்காமல் அலைகழிப்பதாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சத்தியவாணி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயபால் - சுமதி தம்பதியின் மகன் அருண் பிரசாத் என்பவருக்கும், செங்கல்பட்டு மேலமையூர் பகுதியைச் சேர்ந்த உமா என்ற பெண்ணுக்கும் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமாகி இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சில மாதங்களே கணவருடன் சேர்ந்து வாழ்ந்த உமா, பின்னர் தாய் வீட்டிற்குச் சென்ற நிலையில், திருமணத்தின் போது வழங்கப்பட்ட நகைகளைத் திருப்பித் தந்தால் மட்டுமே சேர்ந்து வாழ முடியும் எனத் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது. அதன்படி அருண்பிரசாத் தரப்பில் நகைகள் ஒப்படைக்கப் பட்டு, சேர்ந்து வாழ அழைப்பு விடுக்கப் பட்டதாகவும், இது தொடர்பாக இரு தரப்பிலும் எழுத்துப்பூர்வமாக எழுதிக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.இருப்பினும் உமா தாய் வீட்டிலிருந்து வராததால், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சியிலிருந்து செங்கல்பட்டு வந்த அருண் பிரசாத்தின் தாயார் சுமதி, தனது மருமகளை மகனுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்கக் கோரி செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறை திருச்சியிலிருந்து செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு வந்தும், இரு தரப்பையும் விசாரிக்காமல் ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

சனிக்கிழமை (நவ. 21) அருண் பிரசாத் தனது குடும்பத்தினர் மற்றும் வழக்கறி ஞருடன் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று முறை யிட்டபோது, விசாரிக்காமலேயே வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டதாகக் காவல் ஆய்வாளர் சத்தியவானி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. லஞ்சம் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சுமதியின் வழக்கறிஞர் ரோஸ்லின், புற்றுநோயாளியான சுமதியையும் பொருட்படுத்தாமல் இரண்டு மாதங்களாக அலைகழித்துவிட்டு, தற்போது ஒருதலைப்பட்சமாக வழக்கை முடித்து வைத்ததாகத் தெரிவித்தார். விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாகச் செயல்படும் காவல் ஆய்வாளர் சத்தியவாணி மீது மாவட்டக் காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலி யுறுத்தினார்.

பழவேற்காடு ஏரி அருகே 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி

திருவள்ளூர், நவ.21-திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரிப் பகுதிகளின் அருகே சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. சமூக ஆர்வலர் சிருளப்பாக்கம் பாலாஜி தலைமையிலான குழுவினர் தமிழ்நாடு வனத்துறை அனுமதியுடன் கடந்த ஆண்டு 2,000 பனை விதைகள் நடப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பழவேற்காடு அருகேயுள்ள அவுரிவாக்கம் முதல் அண்ணாமலைச்சேரி வரையிலான 5 கிலோமீட்டர் சாலையின் இருபுறமும் 10 ஆயிரம் பனங்கொட்டைகள் நடப்பட்டுள்ளன.